×
 

மகாராஷ்டிரா மேல்சபைத் தேர்தல்: பாஜக, சிவசேனா, என்சிபி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு.. காங்கிரஸ் ஜீரோ..!

மகாராஷ்டிரா மேல்சபைத் தேர்தலில் பாஜக, சிவசேனா, என்சிபி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் மேல்சபைக்காக நடந்த தேர்தலில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேசமயம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒரு வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சந்தீப் ஜோஷி, சஞ்சய் கனேகர், பாஜகவின் தாதாராவ் கெச்சே, சிவசேனாவின் சந்திரகாந்த் ரகுவன்ஷி, என்சிபி சஞ்சய் கோட்கே ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சி சார்பில் எந்த வேட்பாளரும் நிறுத்தப்படவில்லை.

என்சிபி கட்சியைச் சேர்ந்த சுலபா கோட்கே அமராவதி தொகுதி எம்எல்ஏவாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரின் கணவர் சஞ்சய் கோட்கே மேல்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் கணவரும், மனைவியும் மேல்சபை மற்றும் சட்டப்பேரவையில் இணைந்து செயலாற்றும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: அவுரங்கசீப் சமாதியை இடித்து அகற்றினால் ரூ.21 லட்சம் பரிசு.. கிருஷ்ணஜென்ம பூமி தலைவர் அறிவிப்பால் பரபரப்பு.!

மகாராஷ்டிரா மேல்சபை உறுப்பினர்கள், 2024ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் 4 இடங்கள் கடந்த நவம்பரில் காலியானது. சிவசேனாவின் அமாசா பட்வி, என்சிபியின் ராஜேஷ் விடேகர், பாஜகவின் பிரவின் தட்கே, கோபிசந்த் படால்கர், ரமேஷ் காரத் ஆகியோர் சட்டப்பேரவைக்கு தேர்வாகினர். 

ஆளும் கட்சி கூட்டணியைச் சேர்ந்த இந்த 5 வேட்பாளர்களும் திங்கள்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தனர். சுயேட்சையாக புனே மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில் அவர் மனு குறைந்தபட்சம் 10எம்எல்ஏக்கள் கையொப்பம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் தரப்பில் ஒரு வேட்பாளர்கூட நிறுத்தப்படவில்லை. 

தற்போது 78 உறுப்பினர்கள் கொண்ட மேல்சபையில் 52 உறுப்பினர்கள்தான் உள்ளனர். இதில் 32 உறுப்பினர்கள் மகாயுதி கூட்டணியைச் சேர்ந்தவர்கள்,(பாஜக 19,  சிவசேனா 6, என்சிபி 7) மகாவிகாஸ் அகாதி கூட்டணியில் 17 உறுப்பினர்கள் உள்ளனர். 3 சுயேட்சை உறுப்பின்கள் உள்ளனர்.

78 உறுப்பினர்களில் 30 உறுப்பினர்களை சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர், 22 உறுப்பினர்கள் நகர மற்றும்கிராம உள்ளாட்சிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆசிரியர்கள், பட்டதாரிகள் என தலா 7 பேர், 12 பேரை ஆளுநர் நியமித்தார். புதிதாக 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையடுத்து, ஆளும் கூட்டணியின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. இந்த 5 புதிய உறுப்பினர்களில் 3 பேர் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸுக்கு நெருக்கமானவர்கள், துணை முதல்வர் அஜித் பவருக்கு நெருக்கமான சஞ்சய் கோட்கே என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில் “மேல்சபை உறுப்பினர்கள் சட்டப்பேரவை  உறுப்பின்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், குறைந்தபட்சம் 58 உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். ஆனால், எங்களுக்கு 50 உறுப்பினர்கள்தான் உள்ளனர். எங்களால் ஒரு இடத்தைக்கூட வெல்ல முடியாது” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மணிப்பூராக மாறும் நாக்பூர்.. எதிர்க்கட்சிகள் சாடல்..! வன்முறைக்கு காரணமே திரைப்படம்.. மகாராஷ்டிரா முதல்வர் புதிய விளக்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share