×
 

திடீர் தொழில்நுட்ப கோளாறு.. ஒரு மணி நேரம் வானத்தில் வட்டமடித்த விமானம்.. அச்சத்தில் உறைந்த பயணிகள்..!

கோவையில் இருந்து நேற்று இரவு சிங்கப்பூர் புறப்பட்டு சென்ற விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் மீண்டும் தரையிரக்கப்பட்டு, பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு தரையிறக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. தொழில்நுட்பக்கோளாறு மற்றும் விமானத்தில் பயணிக்கும் சக பயணிகளுக்கு ஏற்படும் உடல் நலக் கோளாறு காரணமாக சில விமானங்கள் தரையிரக்கப்படுவதும் உண்டு. சமீபத்தில் கனடா விமானத்தில் சென்ற விமானியை சிலந்தி கடித்ததால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அதனால் விமானம் தரையிரங்கிய பிறகு பூச்சி மருந்து அடிக்கப்பட்டு 3 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக புறப்பட்டு சென்றதாகவும் செய்திகள் வெளியாகின. இதேபோல் அமெரிக்காவில் பறந்த சரக்கு விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் உடனடியாக தரையிறக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டதும் நடந்தேறியது. இந்நிலையில் கோவையில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் தீடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று இரவு இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது. விமானம் பறக்க துவங்கி, சிறிது தூரம் திருச்சி வான்வெளியில் பறந்து சென்றது. விமானம் பறந்து சென்று கொண்டு இருந்த போது திடீரென விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பைலட் ஏர்போர்ட் அதிகார்களுக்கு தகவல் அளித்துள்ளார். உடனே விமானத்தை கோவையிலேயே மீண்டும் தரையிறக்கும் படி பைலட்டிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் விமானம் தரையிரங்க ஓடுபாதை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: குறைந்த விலையில் விமானத்தில் போக சூப்பர் சான்ஸ்.. காதலர் தினத்துக்கு இண்டிகோ அறிவித்த சலுகைகள்!

இதன் காரணமாகவும், விமானத்தில் அதிகம் இருந்த எரிபொருளை எரிப்பதற்காகவும் கோயமுத்தூர் வான்வெளியில் ஒரு மணி நேரம் சுற்றிய வட்டமடித்தது. பத்திரமாக தரையிரங்குவோமா என பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். சுமார் ஒரு மணி நேரம் வானில் வட்டமடித்த பின்னர் அந்த விமானம் பத்திரமாக கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியது. பயணிகள் பதற்றத்துடன் விமானநிலையத்தை அடைந்தனர். பின்னர் பயணிகளின் பதற்றம் தனிந்த உடன், அந்த பயணிகள் ஹைதராபாத்திற்கு செல்ல காத்திருந்த மாற்று விமானம் மூலம் ஹைதரபாத் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு ஹைதரபாத்தில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற மாற்று விமானம் மூலம் கோவையில் சிக்கி தவித்த பயணிகள் மூன்று மணி நேரத்திற்கு மேலாக காலதாமதமாக சிங்கப்பூர் சென்றது. இதற்கிடையே சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தின் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டது. ஹைதரபாத் சென்ற விமானத்தில் சிங்கப்பூர் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டதால், அந்த விமானத்தில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் கோவையில் காத்திருந்தனர். அவர்கள் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட விமானம் மூலம் கோவையில் இருந்து ஹைதரபாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதேபோன்று நேற்றிரவு சிங்கப்பூர் சென்ற விமானம், இன்று காலை 9.15 மணிக்கு கோவை திரும்பியது. இதனால் காலை 8.40 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டு இருந்த ஹைதராபாத் விமானம் 10.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தாமதமானதால் சிங்கப்பூருக்கு செல்கின்ற விமான பயணிகள் அவதி அடைந்தனர்.

இதையும் படிங்க: 11 ரூபாய்க்கு வெளிநாடு செல்லலாம்.. கனவிலும் கிடைக்காத விமான டிக்கெட் ஆஃபர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share