×
 

மனைவியை தாக்கிய கள்ளக்காதலன்.. கள்ளக்காதலனை கத்தியால் குத்திய கணவன்.. மருத்துவமனை வாசலில் அரங்கேறிய சம்பவம்..!

சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் மனைவியை சரமாறியாக தாக்கிய கள்ளக்காதலனை, மருத்துவமனை வாசலில் வைத்து கத்தியால் குத்திய கணவனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ரெட்ஹில்ஸ்  பகுதியில் வசித்து வருபவர் பிரேம்குமார். வயது 35. லாரி ஓட்டுநரான பிரேம்குமாருக்கு கற்பகம் என்ற பெண்ணுடன் திருமணமாகி, இரண்டு மகன்கள் உள்ளனர். பிரேம்குமார் லாரி டிரைவர் என்பதால் அடிக்கடி வெளியூர்களுக்கு வேலை விஷயமாக லாரி சவாரி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இதனிடையே கற்பகத்திற்கு பெரம்பூர்  பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான 30 வயதான ஹரிகிருஷ்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. பிரேம்குமார் வேலை விஷயமாக வெளியீட் செல்லும் போதும், வீட்டில் இல்லாதபோதும் ஹரி கிருஷ்ணன் கற்பகம் வீட்டிற்கு சென்றுள்ளார். இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இதற்கிடையே ஹரி கிருஷ்ணன் குடி போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. அடிக்கடி கற்பகத்தை டார்ச்சர் செய்ய ஆரம்பித்துள்ளார் ஹரி கிருஷ்ணன்.  ஒரு கட்டத்தில் கற்பகம் ஹரிகிருஷ்ணனை தவிர்க்க முயற்சி செய்து உள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் ஹரி கிருஷ்ணன் கற்பகத்திற்கு போன் செய்துள்ளார்.

ஆனால் கற்பகம் போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் கோவமடைந்த ஹரிகிருஷ்ணன், நேற்று இரவு எட்டு மணி அளவில் கற்பகம் வீட்டிற்கு சென்று கற்பகத்தை அடித்துள்ளார். இதில் காயம் அடைந்த கற்பகம்  சிகிச்சைக்காக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். 

இதையும் படிங்க: திருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தை.. கைவிட்ட காதலர்கள்.. தேடிப்பிடித்து குழந்தையை ஒப்படைத்த போலீசார்..!

கற்பகத்தை பின்தொடர்ந்து வந்த ஹரிகிருஷ்ணன், பெரியார் நகர் மருத்துவமனையில் வைத்து கற்பகத்தை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்போது கற்பகத்தின் மூத்த மகன் தனது தந்தை பிரேம்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அம்மாவை யாரோ வந்து அடிக்கிறார்கள் எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார் வீட்டில் இருந்து கத்தியை கொண்டு வந்து பெரியார் நகர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கே மருத்துமனை வாசலின் வெளியே நின்றிருந்த ஹரி கிருஷ்ணனை  சரமாரியாக கத்தியால் வெட்டினார். 

இதில் ஹரிகிருஷ்ணனுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஹரிகிருஷ்ணனை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் ஏற்கனவே ஹரிகிருஷ்ணன் தாக்கியதில் காயமடைந்த கற்பகம் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரவள்ளூர் போலீசார் பெரியார் நகர்  அரசு மருத்துவமனைக்குச் சென்று பிரேம்குமாரை கைது செய்தனர்.
 
அவரிடம் இருந்த ஒரு கத்தியையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பிரேம்குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மனைவியின் தகாத உறவால் அவர் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும், மனைவியை தாக்கிய கள்ளக்காதலனை மருத்துவமனை வாசலில் வைத்து கணவன் கத்தியால் பலமுறை வெட்டியதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சவாரி ஏற்றுவதில் மோதல்.. கத்தியுடன் சுற்றித்திரிந்த ஆட்டோ டிரைவர்கள்.. 9 பேர் கைது, 4 பேருக்கு மாவுக்கட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share