×
 

சீனாவில், வாடகைக்கு "போலி அலுவலகங்கள்" ; வேலை பார்ப்பது போல் 'நடிக்கும்' இளைஞர்களின் 'நூதன ட்ரெண்ட்'

சீனாவில் பரவலாக இளைஞர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.

இதனால் சமூக கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் இருப்பதற்காக,, போலியான அலுவலகங்களை வாடகைக்கு எடுத்து, இளைஞர்கள் அங்கு வேலை பார்ப்பது போல் நடித்து புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடுவது நூதன ட்ரெண்டாக மாறி வருகிறது. 

வேலை கிடைக்க விட்டாலும் தங்கள் குடும்பத்தினரிடம் அது பற்றி தெரிவிக்க விரும்பாத இளைஞர்கள், வேலை பார்ப்பது போல் நடித்து, புகைப்படம் எடுத்து அதை சமூக ஊடகங்களின் வெளியிட்டு வரும் போக்கு பரவி வருகிறது. 

இதையும் படிங்க: சீனா- பாகிஸ்தானை வியர்க்க வைக்கும்... இந்தியாவின் சோனாமார்க் சுரங்கப்பாதை..!

நாள் ஒன்றுக்கு 30 யுவான்( தோராயமாக இந்திய பணத்தில் 350 ரூபாய் ) வீதம் இதற்காக சிலர் அலுவலகங்களை வாடகைக்கு விட்டு வருகிறார்கள். வடக்கு சீனாவின் ஹெபெய் மாநிலத்தின் இளைஞர்கள் இதுபோன்ற அலுவலகத்தில் நாற்காலியில் அமர்ந்து வேலை பார்ப்பது போல் புகைப்படங்களை எடுத்து அவற்றை சமூக ஊடகங்களில்  வெளியிட்டு வருகிறார்கள். 

இதற்காக வாடகைக்கு விடும் இடங்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதிய உணவு உட்பட கட்டணமாக 30 யுவான் மீதம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் குடும்பத்தினரிடம் தாங்கள் வேலை பார்ப்பது போல் நடித்து சமூக அந்தஸ்தை அவர்கள்நிலை நிறுத்திக் கொள்கிறார்கள். 

அலுவலகத்தை சொந்தமாக நிர்வகிக்கும் உரிமையாளர்( பாஸ்) போன்று நடிக்க வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற இடங்களும் வாடகைக்கு விடப்படுகின்றன. இந்த அலுவலகத்தில் நவீன நாற்காலிகள் போடப்பட்டு அதில் இளைஞர்கள் அமர்ந்து உரிமையாளர்கள் போல் போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக் கொள்ளலாம். 

இதற்கு கூடுதலாக மேலும் 20 யுவான் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
பெரிய நிறுவனங்களில் அதிகரித்து வரும் பணி நீக்கங்களால் வேலையில்லா திண்டாட்டம் உருவாகி இதுபோன்ற நாடக அலுவலகங்கள் முளைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

தெற்கு சீனாவின் 'மார்னிங் போஸ்ட்' பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறது. சீன ஊடகங்களில் பரவலான விவாதங்களையும் இது தொடங்கி வைத்துள்ளது.

இதையும் படிங்க: சீனாவுக்கு அழைப்பு... டிரம்ப் பதவியேற்பை புறக்கணிக்கும் இந்தியா... மோடியின் இப்படியொரு ராஜதந்திரமா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share