×
 

டெல்லியில், வேலையில்லாத படித்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500: காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி!

படித்து வேலையில்லாமல் இருக்கும் டெல்லி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 8500 உதவி பணம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி வழங்கியிருக்கிறது.

டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய முக்கிய கட்சிகளுக்கு இடையே மும்மனைப் போட்டி கடுமையாக உள்ளது. 

"போட்டியே எங்களுக்கும் பாஜகவுக்கும் தான்" என்று ஆம் ஆத்மி கட்சி கூறி வரும் நிலையில், செல்வாக்கு சரிந்துள்ள காங்கிரஸ் தன்னை நிமிர்த்துக் கொள்வதற்காக அதிரடி வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. 

ஏற்கனவே கர்நாடக மாநில தேர்தலில் அந்த கட்சி அளித்திருந்த தேர்தல் வாக்குறுதிகள் ஓரளவுக்கு அந்த கட்சியின் வெற்றிக்கு கை கொடுத்தது. அதன் அடிப்படையில் தற்போது கூட்டணிக் கட்சிகள் கைவிட்டு பின்னடைவு நிலையில் இருக்கும் காங்கிரஸ், டெல்லியிலும் அதேபோல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறது. 

இதையும் படிங்க: சிவசேனா (உத்தவ்) கட்சியும் "இந்தியா கூட்டணி"யில் இருந்து விலகல்: மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி

இதுகுறித்து ராஜஸ்தானின் முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான சச்சின் பைலட் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி கூறியதாவது:-

" டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், " யுவா உடான் யோஜனா"என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். நன்றாக படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் டெல்லி இளைஞர்களுக்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்படி அவர்களுக்குமாதத்துக்கு ரூ.8,500 உதவித் தொகையாக ஓராண்டுக்கு வழங்கப்படும்.

இலவச திட்டம் அல்ல. இது, படித்துவிட்டு வீட்டில் சும்மாவே முடங்கிக் கிடக்கும் இளைஞர்கள் பணம் பெறும் இலவச திட்டமல்ல. நிறுவனம் அல்லது தொழிற்சாலைகளில் தங்கள் திறமையை காட்டக்கூடிய இளைஞர்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும். சம்பந்தப்பட்ட நிறுவனங்களே இந்த நிதி உதவியை வழங்கும். 

" யார் ஒருவர் தங்களது நிறுவனம், தொழிற்சாலையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்துகிறாரோ" அவர்களுக்கு இந்த நிதி உதவி அவர்கள் சார்ந்த நிறுவனங்கள் மூலமாகவே வழங்கப்படும். பயிற்சி பெற்ற துறைகளில் இளைஞர்கள் உள் வாங்கப்படுவதற்காக நாங்கள் முயற்சிப்போம். அதனால் அவர்களே தங்களுடைய திறமையை மேம்படுத்த முடியும்". இவ்வாறு சச்சின் பைலட் கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, "ஆக்கபூர்வமான அரசியலுக்கான கட்சியின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். "கடந்த சில ஆண்டுகளில் டெல்லி மற்றும் மத்திய அரசுகள் இரண்டும் மக்களின் அபிலாசைகளை புறக்கணித்து விட்டு அரசியல் சண்டையில் ஈடுபட்டு வருவதாகவும்" அவர் குற்றம் சாட்டினார்.

 "மத்திய அரசும் டெல்லி மாநில அரசும் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டன. இதுபோன்ற அரசியலை டெல்லி இதுவரை பார்த்ததில்லை. டெல்லியில் பெயர் சூட்டும் அரசியலும் நடந்து வருகிறது. மக்களுக்கு புதிய மாற்று தேவை"என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஏற்கனவே ஜனவரி 6-ம் தேதி 'அன்புச் சகோதரி' ( "பியாரி தீதி யோஜனா") திட்டத்தை அறிவித்து, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. ஜனவரி 8-ல் " ஜீவன் ரக்சா யோஜனா" திட்டத்தின் மூலம் ரூ.25 லட்சம் வரையிலான இலவச காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் டெல்லி அரசியல் களம்.. மும்முனைப் போட்டியில் தலைநகர்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share