×
 

இன்போசிஸ் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு: என்ன வழக்கு?

கிரிஸ் கோபால கிருஷ்ணன் மற்றும் ஐஐஎஸ்சி இயக்குநர் பல்ராம் உள்ளிட்ட 16 பேர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்குப் பதிவு

இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தின் இணைநிறுவனர் சேனாபதி கிரிஸ் கோபால கிருஷ்ணன் மற்றும் ஐஐஎஸ்சி இயக்குநர் பல்ராம் உள்ளிட்ட 16 பேர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கர்நாடகாவின் பெங்களூரு போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்
பெங்களூருவில் உள்ள சதாசிவ நகர் போலீஸ் நிலையம் சார்பில் 71-வது நகர மற்றும் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவின்பெயரில் இந்த 16 பேர் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என பிடிஐ ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.


பெங்களூருவில் உள்ள ஐஐஎஸ்சி நிறுவனத்தில் பணியாற்றும் துர்கப்பா என்பவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த போவி சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் மீது “ஹனி டிராப்” குற்றச்சாட்டை வேண்டுமென்றே குற்றம்சாட்டி அவரை பணியிலிருந்து நீக்கியுள்ளனர். இந்த நபர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஐஐஎஸ் வாரிய அறக்கட்டளை உறுப்பினர்களில் கோபாலகிருஷ்ணனும் உறுப்பினராக இருக்கிறார். 
பெங்களூரு ஐஐஎஸ்சி நிறுவனத்தில் நிலையான தொழில்நுட்ப மையத்தில் பணியாற்ி வருகிறார். இவர் மீது கடந்த 2014ம் ஆண்டு ஹனி டிராப் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, பின்னர் பணியிலிருந்து நீக்கப்பட்டார் என்று துர்கப்பா குற்றம்சாட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தன்னை சாதிரீதியாக அவதூறாகப் பேசியும், மிரட்டல் விடுத்தும், தன்னை பணியிலிருந்து நீக்கினர் என்று துர்கப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக கோவிந்தன் ரங்கராஜன், ஸ்ரீதர் வாரியர், சந்தியா விஸ்வரியா, ஹரி கேவிஎஸ், தாசப்பா, பல்ராம், ஹேமலதா மிஷி, சத்தோபதயா, பிரதீப் டி சவக்கர், மனோகரன் உள்ளிட்டவர்கள் மீதும் துர்கப்பா புகார் அளித்துள்ளார். இந்த வழக்குப்பதிவு செய்தது குறித்து இதுவரை கிரிஸ் கோபாலகிருஷ்ணன் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை.

யார் இந்த கிரிஸ் கோபாலகிருஷ்ணன் 
இன்போசிஸ் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன். 2011 முதல் 2014 வரை இன்போசிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக கிரிஸ் இருந்தார். 2007 முதல் 2011 வரை இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் மேலாண் இயக்குநராகவும் கிரிஸ் பணியாற்றினார்.
2013-14ம் ஆண்டில் இந்திய தொழிற்கூட்டமைப்பின் தலைவராகவும், 2014ம் ஆண்டில் டாவோஸில் நடந்த உலக  பொருளாதார கூட்டத்திலும் பங்கேற்றார். 2011ம் ஆண்டு கோபாலகிருஷ்ணனுக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தது. 
முதுகலை இயற்பியல் பட்டம் முடித்த கிரிஸ், சென்னை ஐஐடியில் கணினி அறிவியல் பட்டம் முடித்தார். இந்திய தேசிய பொறியியல் அகாடெமி, ஐஇடிஇ அமைப்பின் உறுப்பினராகவும் கிரிஸ் உள்ளார்.

இதையும் படிங்க: கைது நோட்டீசை அனுப்புவதற்கு 'வாட்ஸ்அப்' பயன்படுத்தக்கூடாது; காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு 

இதையும் படிங்க: கழுத்தை நெரித்தக் கடன்; மனைவி, மகளுடன் வெள்ளி வியாபாரி தூக்கு போட்டுத் தற்கொலை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share