ஆளுநர் போறது வாக்கிங்னா..உதயநிதி போறது ரன்னிங்கா.. ? தமிழிசை விளாசல் ..!
ஆளுநர் சட்டசபையில் வாக்கிங்? போறார் என்றால் செய்தியாளர் கேட்கும் கேள்விக்கு ஓடும் உதயநிதி ரன்னிங் செய்கிறாரா? என விமர்ச்சித்துள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன்
காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட ஓரிக்கை தனியார் பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்த ஐம்பெரும் விழாவில் பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு சிறந்த மாணவ, மாணவிகளுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் பரிசுகளை வழங்கினார். பின்னர் காஞ்சிபுரம், ஓரிக்கை பள்ளியின் 39வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டார் விழா மேடையில் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் மாணவ மாணவிகள் பெற்றோரை நினையுங்கள் அதுவே வெற்றியின் படி.
நான் ஆளுநராக பதவி ஏற்பதற்கு முன்பு முதலமைச்சர் மற்றும் நீதிபதி முன்பு நிறைய கட்டுப்பாடுகள் இருந்தது இருப்பினும் ஆளுநர் பொறுப்பேற்பதற்கு முன்பு பெற்றோருடன் சென்று ஆசிர்வாதம் வாங்கிய பின் தான் கையெழுத்திட்டு ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டேன் என தமிழிசை சௌந்தர்ராஜன் பேசினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் , மத்திய அரசு 7000 கோடி வரி விளக்கு அளித்த நிலையில் பொங்கல் பரிசு தாய்மார்களுக்கு ரூ.1000 தர நிதி இல்லை என தமிழக அரசு தெரிவிக்கிறது யார் அந்த சார்? என்ற முரண்பட்ட கருத்து போலீஸ் கமிஷனருக்கும் உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கும் இருந்தது, இதை ஏன் அரசியலாக்குகிறீர்கள் என கேட்ட முதலமைச்சர் தற்பொழுது கட்சியினர் இவர் தான் அந்த சார் என சொல்லும்பொழுது இந்த வழக்கு உதாசீனப்படுத்துவதாக உள்ளது என்றார்.
ஆளுநர் சட்டசபையில் வாக்கிங்? போறார் என்றால் செய்தியாளர் கேட்கும் கேள்விக்கு ஓடும் உதயநிதி ரன்னிங் செய்கிறாரா? என்று விமர்ச்சித்த தமிழிசை சௌந்தர்ராஜன் ,ஈரோடு கிழக்கு தேர்தல் குறித்து மாநில தலைவர் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரொம்ப ஓவரா போறீங்க ..பிரிவினைவாதத்தை தூண்டுவது யார் ? திமுகவை வறுத்தெடுத்த தமிழிசை..!