வேங்கைவயல் வழக்கு.. நீதிமன்றம் போங்க திருமா.. கார்த்தி சிதம்பரம் கொடுத்த வேற லெவல் ஐடியா.!
வேங்கைவயல் விவகாரத்தில் திருமாவளவனிடம் ஏதேனும் தகவல் இருந்தால், அதை நீதிமன்றத்தில் சமர்பித்து, வேறு அமைப்புகள் மூலம் விசாரணை கேட்கலாம் என்று சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் 3 பட்டியலின இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மீதே புகார் கூறப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழக காவல் துறையின் விசாரணையை நம்ப முடியவில்லை என்று திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார். விசிகவும் சிபிஎம்மும் சிபிஐ விசாரணை கோரியுள்ளன. இ ந் நிலையில் சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசியிருக்கிறார்.
காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”வேங்கைவயல் விவகாரத்தில் திருமாவளவனிடம் ஏதேனும் தகவல் இருந்தால் அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம். அதை வைத்து, வேறு அமைப்புகள் மூலம் விசாரணை கேட்கலாம். தமிழகத்தில் முதல்வராக வர சாதி பாகுபாடு எதுவும் கிடையாது. எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கட்சிக்கு தலைவராகலாம். தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றால் முதல்வராகி விடலாம்.
இதையும் படிங்க: வேங்கைவயல் விவகாரம் - தனிமனித மோதலே காரணம்... நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லின் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் உள்ளன. அதில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாததே முக்கியக் காரணம். இதில் பணிபுரியும் ஊழியர்கள் மிகவும் திறமையானவர்கள்தான். ஆனால், அரசு பின்புலமாக இருந்தால்தான் அந்நிறுவனம் வளர்ச்சி அடையும். நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மக்களுக்கான ஆக்கப்பூர்வமான விஷயங்களைப் பற்றி பேசுவதே இல்லை. எனவே, சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசுவதை நான் கவனிப்பதே இல்லை” என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.
இதையும் படிங்க: கி.வீரமணியை கண்டிக்கும் விசிக...பெரியாரை விமர்சிக்கும் சீமானை கண்டிக்காமல், வேங்கை வயல் விவகாரத்தில் அரசை ஆதரிப்பதா? என கேள்வி