×
 

எலான் மஸ்க், காஷ் பட்டேல் இடையே லடாய்.! மண்டையை பிய்த்து கொள்ளும் ட்ரம்ப்

எலன் மஸ்க்கும், காஷ் பட்டேலும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது அமெரிக்க அரசாங்கத்தின் மேலிடத்தில் பனிப்போர் ஒன்று உருவாகிவிட்டது என்று சொல்லத் தோன்றுகிறது

அமெரிக்காவின் 9 ஆவது FBI இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி அமெரிக்கரான காஷ் பட்டேல்க்கும் DOGE தலைவரான உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலன் மஸ்க்கும் இடையே பனி போர் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

DOGE அதாவது அமெரிக்க அரசாங்கத்தின் தேவையில்லாத செலவினங்களை கட்டுப்படுத்தும் ஆலோசனை அமைப்பாகும், இது சுமார் ஆறு லட்சம் கோடி ரூபாய் வரைஒரு வருடத்திற்கு வீணடிக்கப்படும் பணத்தை நல்ல செலவினங்களுக்காக மாற்றி விட வேண்டிய பொறுப்பை  கொண்ட அமைப்பாகும்.

அந்த வகையில் DOGE அமைப்பின் தலைவராக பதவியேற்ற நாள் முதலே பலபேரின் நிம்மதியை கெடுக்கும் வகையில் எலான் மஸ்க் செலவினங்கள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளையும் மின்னஞ்சல் மூலமாக விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்,

இதையும் படிங்க: கடும் எதிர்ப்பு..! ஜஸ்ட் மிஸ்.. தப்பித்த காஷ்யப் பட்டேல்.. முதல் இந்திய வம்சாவளி FBI தலைவர்..!

இந்த நிலையில் புதிதாக பதவி ஏற்றிருக்கும் காஷ் பட்டேல் தலைமையிலான பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் அமைப்பில் பணி புரியும் அதிகாரிகளும் மின்னஞ்சல் மூலம் பதிலளிக்க வேண்டும் என எலன் மாஸ்க் உத்தரவிட்டிருந்தார். ஆனால் காஷ் பட்டேல் பதவி ஏற்ற அன்றே சர்ச்சைக்குரிய எலன் மஸ்கின் மின்னஞ்சலை புறக்கணிக்குமாறு தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் செல்வாக்கு மிக்க ஆலோசகராகவும் அரசாங்க செயல் திறன் துறையை வழிநடத்தி  பணியாற்றும் மஸ்க், கடந்த சனிக்கிழமை அனைத்துக் FBI ஊழியர்களும் தங்கள் வாராந்திர பணியை ஒரு சுருக்கமான மின்னஞ்சல் சுருக்கத்தில் தெரிவிக்க வேண்டும், இல்லையென்றால் ராஜினாமா செய்ய தயாராக இருக்க வேண்டுமென ஒரு உத்தரவை பிறப்பித்தார்.

அரசாங்க செலவினங்களையும் அதிகாரத்தையும் குறைக்கும் நோக்கில் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கைக்கு பதில் அளிக்க தவறினால் அவர்கள் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. மஸ்கின் இந்த மின்னஞ்சல் அதிகாரத்தை காஸ் பட்டேல் பதவி ஏற்ற அதே தினமே எதிர்த்து அதை நிராகரிக்கவும் செய்தார்.

காஷ் பட்டேலின் இந்த தைரியமான அணுகுமுறையை அமெரிக்கர்கள் மட்டுமல்லாது அங்கு பணிபுரியும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

அமெரிக்க அதிபரை  தலையாட்டி பொம்மை போல வைத்திருக்கும் எலன் மஸ்க் உடனே மோதும் காஷ் பட்டேலின் தைரியத்தை பார்த்து பதற்றத்தில் இருந்த அதிகாரிகள் ஆச்சரியப்பட்டு போனார்களாம். அதே நேரத்தில் டொனால்ட் ட்ரம்பின் நம்பிக்கைக்கு உரிய இரு தளபதிகள் என்று பார்க்கப்பட்ட எலன் மஸ்க்கும், காஷ் பட்டேலும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது அமெரிக்க அரசாங்கத்தின் மேலிடத்தில் பனிப்போர் ஒன்று உருவாகிவிட்டது என்று சொல்லத் தோன்றுகிறது.

இதையும் படிங்க: டெஸ்லா காரை நடுத்தர மக்கள் வாங்கவே முடியாதா? வரியைக் குறைத்தாலும் இந்த விலையா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share