×
 

காஷ்மீர் பிரச்சினையை, ஐ.நா சபைக்கு கொண்டு சென்று இருக்கக் கூடாது ; நேருவின் தவறுகளில் இதுவும் ஒன்று; மூத்த காங்கிரஸ் தலைவர் கரண்சிங் குற்றச்சாட்டு

காஷ்மீர் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னாள் பிரதமர் ஜவர்ஹர்லால் நேரு எடுத்துச் சென்றிருக்கக்கூடாது; அவர் செய்த சில தவறுகளில் அதுவும் ஒன்று என்று, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கரண் சிங் குற்றம் சாட்டி இருக்கிறார்.

93 வயது காங்கிரஸ் மூத்த தலைவர் டாக்டர் கரண்சிங்,  காஷ்மீர் மகாராஜாவான ஹரிசிங்கின் மகன் ஆவார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு இன்று அவர் சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“நான் 18 வயதில் அரசியலுக்கு வந்தேன். ஏனென்றால் என் தந்தை மிகவும் வேதனையான சூழ்நிலையில் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை அப்போது உருவாகியது. அதற்கு காரணம் ஷேக் அப்துல்லா. 

இதையும் படிங்க: அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மோதும் பர்வேஷ் வர்மா: ஆம் ஆத்மியை முந்திய பாஜக... வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

காஷ்மீர் விவகாரத்தில்ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று ஒரு வாக்கெடுப்புக்கு நாம் ஒப்புக்கொண்டோம். நாம் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றிருக்க வேண்டிய அவசியமில்லை. ஜவஹர்லால் நேரு காஷ்மீர் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்றது ஒரு தவறு.


 பண்டிட் நேரு செய்த சில தவறுகளில் இதுவும் ஒன்று. மவுண்ட்பேட்டன்தான் அவரை அதற்குள் தள்ளினார் என்று நினைக்கிறேன். இந்த முடிவு நிலைமையை மேலும் சிக்கலாக்கியது.

தனது வாழ்நாள் முழுவதும் தீவிரமான "டோக்ரா எதிர்ப்பு உணர்வை" ஷேக் அப்துல்லா கொண்டிருந்தார். மகாராஜா ஹரி சிங்கிற்கு எதிராக ஷேக் அப்துல்லா பரப்புரை செய்தார்.

 இறுதியாக அவர், நேருவிடம் சென்று "மகாராஜா ஹரி சிங் மாநிலத்தில் இருக்கும் வரை தன்னால் தேர்தலில் வெற்றி பெற முடியாது" என்று கூறினார்.

இதனால், என் தந்தை காஷ்மீர் மாநிலத்தைவிட்டு வெளியேறினார்".

இவ்வாறு டாக்டர் கரண்சிங் கூறினார். 

காஷ்மீர் மகாராஜா ஹரிசிங்கிற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையை தொடர்ந்து 1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர சட்ட விதிகளின்படி ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவில் சேர அனுமதித்தது. அத்துடன் அப்போது செயல்பட்டு வந்த சுதேசி அரசுகள் தங்கள் விருப்பப்படி இந்தியாவிலும் அல்லது பாகிஸ்தானுடனும் சேர்வதற்கு அனுமதி அளித்திருந்தது.

டாக்டர் கரண்சிங் முன்னாள் மத்திய அமைச்சராகவும், காஷ்மீர் கவர்னராகவும், எம்பி ஆகவும், வெளிநாட்டு தூதராகவும், பல்கலைக்கழக வேந்தராகவும் பதிவு வகித்தவர்.

இதையும் படிங்க: யார் அந்த சார்? அரசு பள்ளி தத்தெடுப்பு, பொங்கல் பரிசு 1000 ரூபாய்… அரசுக்கு எதிராக கிளம்பும் காங்கிரஸ்…சூடுபிடிக்கும் களம்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share