×
 

தலைவிரித்தாடும் ராகிங் கொடுமை! பிறப்புறுப்பில் காம்பஸால் குத்தி.. கொடூரமாக சித்ரவதை செய்த சீனியர்கள்.!

அரை நிர்வாணமாக கட்டிவைட்டு கொடுமைபடுத்திய சீனியர் மாணவர்கள் கைது

சமீப காலமாக கேரள கல்வி நிலையங்களில் ராகிங் கொடுமை தலைவிரித்தாடுகிறது.

முன்னதாக, கொச்சியில் 15 வயது பள்ளி மாணவர் ஒருவர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

அந்த மாணவனை டாய்லெட் சீட்டை நாக்கால் நக்க சொல்லியும், அவரது தலையை டாய்லெட் சிங்கிற்குள் வைத்து ஃப்ளஸ் செய்தும் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: கல்லூரியில் அதிர வைக்கும் ராகிங்: அந்தரங்க உறுப்பில் தம்புல்ஸை கட்டி தொங்கவிட்டு அட்டூழியம்..!

இதனால் ஏற்பட்ட அவமானம் தாங்காமல் அந்த மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அரசு நர்சிங் கல்லூரியில், 

முதலாமாண்டு மாணவர்களை, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மிகக் கொடுமையான முறையில் ராகிங் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஜூனியர் மாணவனை கட்டிலில் கட்டி வைத்து, ஆடைகளை களைந்து அரை நிர்வாணமாக்கி உள்ளனர். 

அவனது உடலில் கூர்மையான காம்பஸ் போன்ற டிவைடரால் ஒன்று, இரண்டு, மூன்று என்று சொல்லியபடியே குத்தி குத்தி காயப்படுத்தினர்.

மாணவனின் அந்தரங்க உறுப்பின் மேல் டம்பிள்ஸை வைத்தும், கூர்மையான டிவைடரால் குத்தியும் கொடுரமாக சித்ரவதை செய்துள்ளனர்.

அத்துடன் நிற்காமல், அவர்களுக்கு மேலும் வலியை ஏற்படுத்தும் வகையில் காயங்களில் சில கிரீம்களைத் தடவி உள்ளனர். 

அதன் வலியால் துடித்து காயமடைந்த மாணவர்கள் சத்தம் போட்டபோது, அவர்களின் வாயில் அந்த கிரீம்களை திணித்துள்ளனர். 

இந்த கொடூரச் செயல்களை அந்த சீனியர் மாணவர்கள் வீடியோ எடுத்தது மட்டுமின்றி, வேறு யாரிடமாவது இதுகுறித்து கூறினால் இதனை பரப்பிவிடுவோம் என மிரட்டி உள்ளனர். 

இதுகுறித்து ஜூனியர் மாணவர் ஒருவர் தனது தந்தையிடம் தெரிவித்த பிறகே விஷயம் வெளிச்சதிற்கு வந்துள்ளது.

அந்த மாணவர்கள் அளித்த புகாரில் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சுமார் 3 மாதங்களாக, 5 மாணவர்கள் சேர்ந்து தங்களை தொடர்ச்சியாக கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

புகாரை அடுத்து ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் சாமுவேல் ஜான்சன், ராகுல்ராஜ், ஜீவ், ரிஜில் ஜித், விவேக் ஆகிய 5 பேரை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ள நிலையில், 

அவர்கள் அனைவரையும் ராகிங் தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

நர்சிங் கல்லூரியின் முதல்வர் சுலேகா, விடுதியின் உதவி வார்டனாக இருந்த உதவி பேராசிரியர் அஜீஷ் மணி ஆகிய இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். 

இந்நிலையில் இந்த கொடூரமான ராகிங்கில் ஈடுபட்ட 5 மாணவர்கள் தங்களின் படிப்பை தொடர தடைவிதிக்க கேரள மாநில செவிலியர்கள் மற்றும் செவியியர்கள் உதவியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

செவிலியர் பணியில் ஈடுபடுவோருக்கு மனுதாபிமானம் மிக மிக அவசியம். ஆனால் ராகிங்கில் ஈடுபட்ட இந்த 5 மாணவர்களும் மின கொடூரமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த செயலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அவர்கள் தங்களின் செவிலியர் படிப்பை தொடரவோ அல்லது செவிலியர் பணியில் ஈடுபடவோ தகுதி அற்றவர்கள்.

அவர்கள் படிப்பை தொடர தடை விதிக்கப்படுகிறது என செவிலியர் உதவியாளர் கவுன்சில் உறுப்பினர் உஷா தேவி தெரிவித்தார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க: யார் இந்த ‘கேரளாவின் பழங்குடி’ மன்னன்? குடியரசு தின நிகழ்ச்சியில் முதல்முறையாக பங்கேற்றார்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share