திமுகவுக்கு வந்த சோதனை.. கமிஷனர் அறையில் கேமரா.. நகரச் செயலர் கட்சியிலிருந்து திடீர் நீக்கம்..
கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் வரைக்குள் ரகசிய கேமரா வைத்து கண்காணித்த விவகாரத்தில் திமுக நகரச் செயலாளர் நவாப் கட்சியிலிருந்து சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கடந்த ஜனவரி 25ஆம் தேதி அன்று நடைபெற்றது. அப்போது அதிமுக- வினர் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தை மட்டும் சுத்தம் செய்ததாக கூறி திமுகவினர் சிலர் புகார் எழுப்பினர். இதனை அடுத்து நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி அறையில், சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணனை நாகராஜ் தலைவர் பரிதா நவாப்பின் கணவரும், நகர திமுக செயலருமான நவாப் கடுமையாக வசைபாடியுள்ளார்.
தொடர்ந்து ராமகிருஷ்ணனும் நவாப்பை எதிர்த்து கேட்கவே இருவருக்கும் வாக்குவாதம் வெடித்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் கடந்த ஆறாம் தேதி சமூக வலைதளங்களில் பரவி வலைதளவாசிகள் என் கவனத்தை பெற்றது.
இந்த சூழலில் தான், நகராட்சி ஊழியர்கள் கமிஷனர் அரைக்குள் கடந்த 29ஆம் தேதி நுழையும் போது அங்கு இருந்த டிஜிட்டல் கடிகாரத்தில் பீப் சத்தம் கேட்டுள்ளது. இதை அடுத்து அங்கிருந்த ஊழியர்கள் கடிகாரத்தை கழற்றி பார்த்த போது, கமிஷனர் அறையை நோட்டமிடுவதற்காக ரகசிய கேமரா ஒன்று பொருத்தப்பட்டிருந்தது கண்டெடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: தொட முடியாத உயரத்தில் திமுக..! வெளியானது ஈரோடு கருத்துக்கணிப்பு
இதில் அதிர்ச்சி அடைந்த நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திமுக கட்சி கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் நவாபை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்டு அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக கட்சி பொதுச் செயலர் துரைமுருகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திமுக,அதிமுகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் கார்கொடிகள்.!! மொத்தமாக அகற்றப்படுமா??