சீமான் வீடு முற்றுகை; கையில் உருட்டுக்கட்டையுடன் குவிந்த நாதவினர்; நீலாங்கரையில் உச்சக்கட்ட பதற்றம்!
பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் வீட்டை இன்று முற்றுகையிட உள்ளதாக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் வீட்டை இன்று முற்றுகையிட உள்ளதாக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பேசி வருகிறார். கடந்த 9ம் தேதி செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய சீமான், தாய்- மகளுடன் உறவு வைத்துக் கொள்ள சொன்னவர்தான் பெரியார், அவரா பெண்ணுரிமைக்காக போராடியவர் என பேசியிருந்தார்.
இந்த கருத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தத்தோடு, வீட்டை முற்றுகையிட்ட முயற்சியும் செய்தனர். ஆனால் அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். இதனையடுத்து பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியதாக சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 65க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பெரியாரை இழிவாக பேசிவிட்டு இங்கே எதுக்கு வந்தீங்க..? நாதக வேட்பாளர் சீதாலட்சுமியிடம் எகிறிய திமுக பெண் நிர்வாகி..!
இதனிடையே, பெரியார் குறித்து கொச்சைக் கருத்துக்களை பரப்பி வரும் சீமான் இல்லத்தை இன்று முற்றுகையிட உள்ளதாக மே 17 இயக்கம், பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விருதலைக் கழகம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அமைப்புகளைக் கொண்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
இதனையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் இல்லம் முன்பு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சீமான் இல்லத்தை முற்றுகையிட முயல்பவர்களை தடுத்து நிறுத்துவதற்காக நேற்றிரவு முதலே ஏராளமான நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் அப்பகுதியில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக 50க்கும் மேற்பட்டோர் கையில் உருட்டுக்கட்டையுடன் சீமான் இல்லத்தை சுற்றி பாதுகாப்பிற்கு இருப்பதால் பதற்றம் நிலவுகிறது. தங்களது தற்காப்பிற்காகவே கையில் உருட்டுக்கட்டை வைத்துள்ளதாகவும், முற்றுகையிட வருபவர்கள் எல்லை தாண்டினால் பயன்படுத்த நேரிடலாம் என்றும் நாம் தமிழர் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பேரம் பேசியது உண்மையா? - திமுக குறித்து சீதாலட்சுமி சொன்ன ஒற்றை வார்த்தை - பரபரக்கும் நாதக!