×
 

நடத்தையில் சந்தேகப்பட்டதால் விபரீதம்.. கணவனின் கண்ணில் பெவிகால் ஊற்றி தீ வைத்து கொளுத்திய மனைவி..!

பந்தலூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனின் கண்களில் பெவிகால் ஊற்றி, தீ வைத்து கொளுத்தி கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் ஹட்டி பகுதியைச் சேர்ந்தவர் முரளி. வயது 37. இவரது மனைவி விமலா ராணி. வயது 26. இருவருக்கும் 9 ஆண்டுகளுக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 8 வயது, 5 வயது, 2 வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.  முரளி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். பணிகாரணங்களால் அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார்.  இதனிடையே முரளிக்கும், மனைவி விமலா ராணிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக பிரச்னை எழுந்துள்ளது.

மனைவி விமலா ராணிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட முரளி அடிக்கடி அவருடன் சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்குள் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு விமலாராணி வீட்டிற்கு வெளியே நின்று, யாருடனோ போனில் பேசி உள்ளார். அந்த நேரம் பணி முடித்து வந்த முரளி, யாருடன் போனில் பேசிக் கொண்டிருக்கிறாய் என கேட்டு சண்டை போட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறியுள்ளது. அக்கம்பக்கத்தினர் வந்து இருவரையும் சமாதானப்படுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: மனைவி நடத்தையில் சந்தேகம்.. கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் கைது.. இறுதிச்சடங்கில் நடந்த ட்வீஸ்ட்..!

இதையடுத்து முரளி வீட்டினுள் சென்று தூங்கியுள்ளார். இரவில் அருகில் படுத்து தூங்கிய விமலா ராணி, அடுத்த நால் காலை சீக்கிரம் எழுந்துள்ளார். பக்கத்தில் படுத்திருந்த கணவன் மீது கோவத்தில் இருந்த விமலா ராணி, தூங்கிக்கொண்டிருந்த கணவன் முரளியின் கண்களில் பெவிகோலை ஊற்றியுள்ளார். கண்களை திறக்க முடியாமல் கஸ்டப்பட்ட முரளியை தீ வைத்து எரித்துள்ளார். முரளியை பெட்ரூமில் வைத்து பூட்டிவிட்டு வெளியில் ஓடிவந்து சாதாரணமாக எப்போதும் போல இருந்துள்ளார். பெவிகால் கண்களை மூடிய நிலையில் தீக்காய்ங்களால் முரளி அலறிதுடிக்கவும் அக்கம்பக்கத்தினர் முரளியை மீட்டுள்ளனர். பலத்த காயங்களுடன் தவித்த முரளியை பந்தலூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.  பின்னர் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அதில் முரளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன் தனது மனைவியின் நடவடிக்கை குறித்தும், தான் மீது தீ வைத்தது குறித்தும் போலீசிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக தேவாலா போலீசார் வழக்கு பதிவு செய்து, விமலா ராணியிடம் விசாரணை மேற்கொண்டனர். விமலாராணி, கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து விமலாராணி கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மனைவிகள்... வாடகைக்கு! 10 நாள் முதல், 1 வருடம் வரை ஒப்பந்தம்; மத்திய பிரதேச கிராமத்தில் விசித்திரம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share