×
 

வீடு, கார் இல்லை: 1.73 கோடிக்கு சொத்துக்கள்; பிரமாண பத்திரத்தில் கெஜ்ரிவால் தகவல்...

டெல்லி சட்டசபை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால், தனது சொத்து மதிப்பு குறித்து பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அவருக்கு சொந்தமாக வீடோ அல்லது காரோ இல்லை. ஆனால் அவருடைய சொத்து மதிப்பு ஒரு கோடியே 73 லட்சம் ரூபாய் என்று அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 

முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் டெல்லி சட்டசபை தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். இதற்காக தனது வேட்பு மனுவை அவர் நேற்று தாக்கல் செய்தார். 

அப்போது அவர் இணைத்திருந்த பிரமாண பத்திரத்தில் தன்னுடைய சொத்து மதிப்பு ஒரு கோடியே 73 லட்சம் ரூபாய் என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் அவருக்கு சொந்தமாக காரோ அல்லது வீடோ இல்லை என்றும் அதில் அவர் தெரிவித்து இருக்கிறார். 

இதையும் படிங்க: அரவிந்த் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல்: அமலாக்கப் பிரிவு நடவடிக்கையலிருந்து தப்புவாரா?

அவருடைய வங்கி கணக்கு சேமிப்பு தொகை இரண்டு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய். ரொக்க பணம் இருப்பு ரூ 50,000. இவற்றுடன் கெஜ்ரிவாலின் அசையும் சொத்து மதிப்பு மூன்று லட்சத்து 46 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

காசியாபாத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளிட்ட அவருடைய அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 1 கோடியே 70 லட்சம் ஆகும். வங்கியில் நிலையான வைப்புத் தொகை, பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்,  ஆயுள் காப்பீட்டு வாரிசுகள் எதுவும் தனக்கு இல்லை என்றும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலின் ரொக்கப் பணம் கையிருப்பு ரூ.32,000. அவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சம் ஆகும். 

கெஜ்ரிவாலுக்கு சொந்தமாக காரோ அல்லது வீடோ இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் அவருடைய மனைவி சுனிதா 2017 ஆம் ஆண்டு மாடல் மாருதி பலேனோ கார் வைத்திருக்கிறார். அவரிடம் இருக்கும் நகைகளின் மதிப்பு ரூ. 25 லட்சத்து 90 ஆயிரம். அவற்றில் 320 கிராம் தங்கமும் அடக்கம். 

14 குற்ற வழக்குகள், 2023- 24 ஆம் ஆண்டு காலத்தில் கெஜ்ரிவால் தனது சட்டமன்ற உறுப்பினர் சம்பளத்தின் மூலம் ரூ. 7,21,530 சம்பாதித்து இருக்கிறார். அத்துடன் மனைவி சுனிதாவின் ஓய்வூதிய வருமானம் ரூ. 14,10,740. மேலும் குருகிராமில் அவருக்கு சொந்தமாக ஒரு வீடும் உள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கு உள்ளிட்ட மொத்தம் 14 குற்ற வழக்குகள் அவர் மீது இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார் கடந்த 2020 தேர்தலில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின்படி அவர் மீது 13 வழக்குகள் நிலுவையில் இருந்தன.

இதையும் படிங்க: மது கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கப்பிரிவுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share