×
 

என்.ஆர்.காங்கிரஸ் - விஜய்யின் தவெக கூட்டணி..? புதுச்சேரியில் பரபரக்கும் அரசியல் களம்.. அதிர்ச்சியில் பாஜக!!

புதுச்சேரியில் பாஜக கூட்டணியிலிருந்து விலகி என்.ஆர். காங்கிரஸ் - விஜய்யின் தவெகவுடன் கூட்டணி வைக்க காய்கள் நகர்த்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

புதுச்​சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்ட​ணி ஆட்சி நடைபெறுகிறது. அக்கூட்டணியின் தலைவர் ரங்கசாமி முதல்வராக இருக்​கி​றார். என்றாலும் பாஜக - என்.ஆர். காங்கிரஸ் இடையேயான உறவு முன்பு போல் இணக்கமாக இல்லை என்று கூறப்படுகிறது. ரங்கசாமியின் பல கோரிக்​கைகளை மத்திய அரசு கண்டு​கொள்​ளவில்லை. புதுச்சேரியில் பாஜக எம்எல்​ஏ-க்கள் வாரியத் தலைவர் பதவிகளை கேட்டும் அசைந்துகொடுக்காமல் ரங்கசாமி இருக்​கிறார். புதுச்சேரி மாநில அந்தஸ்து பிரச்சினை உள்பட எதற்கும் டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்திப்பதையும் ரங்கசாமி தவிர்த்து வருகிறார்.


2026இல் புதுச்சேரி சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியுடனே கூட்டணியைத் தொடர விரும்புகிறது. ஆனால், ரங்கசாமி தனது நண்பர் புஸ்ஸி ஆனந்த் மூலம் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி வைக்க கணக்கு போட்டுவருவதாகத் தெரிகிறது. விஜய்க்கு புதுச்சேரியில் அதிக ரசிகர்கள் இருப்பதும் இதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. இதனால், சட்டமன்றத் தேர்தலின்போது ரங்கசாமி கூட்டணி மாறுவார் என்றும் கூறப்படுகிறது. என்றாலும் பாஜக அவரை தக்க வைக்க, 2026 தேர்தலிலும் ரங்கசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று கூறி வருகிறது. ஆனால் ரங்கசாமி வழக்கம்​போல் மெளனம் காத்து வருகிறார்.


மேலும் தமிழகத்தைச் சேர்ந்த திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிக்கு புதுச்சேரியிலும் ஆதரவு தளம் இருப்பதுபோல என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஆதரவு தளத்தை உருவாக்க ரங்கசாமி திட்டமிட்டு வருகிறார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேர்தலில் போட்டியிடவும் ரங்கசாமி விரும்புகிறார். ரங்க்சாமி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் புதுவையை ஒட்டி​யுள்ள கடலூர், விழுப்​புரம், கள்ளக்​குறிச்சி, திருவண்​ணாமலை, நாகை, மயிலாடுதுறை, சேலம் ஆகிய பகுதி​களில் களமிறங்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்.அதற்கு விஜய்யோடு கூட்டணி வைப்பதும் சரியாக இருக்கும் என்றும் அவர் கருதுவதாகக் கூறப்படுகிறது. எனவே என்.ஆர். காங்கிரஸ் - தவெக இடையே கூட்டணி ஏற்படும் என்று ரங்கசாமி ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: புதுச்சேரி சிறுமிக்கு பாலியல் தொல்லை... கருத்து தெரிவித்த பிரபல 'யூ-டியூபர்' கைது..!

இதையும் படிங்க: குற்றமே நடக்கலைன்னு சொன்னோமா..? விஜய்க்கு திமுக எம்.பி. பதிலடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share