×
 

ஆவேசமாக உள்ளே புகுந்த இன்ஸ்பெக்டர்..! பளிச் பளிச் என அறை..! கைது செய்யப்பட்ட சீமான் காவலர்..!

சீமானின் காவலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இது போதாத காலம் போல, ஏற்கனவே அவரது வீட்டை முற்றுகையிடுவதாக கூறி குடும்பத்தினரை பெரும் பரபரப்பு ஆளாக்கினர் சில திராவிடர் கழகத்தினர். அதனை அடுத்து நடிகை விஜயலட்சுமியின் புகார் தொடர்பான வழக்கில் சீமானுக்கு எதிரான உத்தரவுகள் நீதிமன்றம் பிறப்பித்ததை தொடர்ந்து, மொத்தமாக ஆடிப் போனது சீமான் வட்டாரம்.

இந்த நிலையில் தான் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் காவல் நிலையத்தில் ஆஜராகும் படி ஒட்டப்பட்டு இருந்த சம்மனை அவரது உதவியாளர் கிழித்து எறிந்தார். இதனால் ஆத்திரமடைந்த நீலாங்கரை இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்து அவருக்கு கன்னத்தில் பளிச், பளிச்சென இரண்டு அடி விட்டனர். அவரும் எதிர்த்து போலீசாரிடம் சண்டை போடவே உடன் வந்த மப்டி போலீசார் வெளுத்து எடுத்தனர்.

இதையும் படிங்க: 'நான் இருக்கும்போது குண்டு வீசுடா..! தீக்குளித்து செத்துவிடுவீங்கடா..! சீமான் ஆவேசம்..!

இந்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை காலை 11 மணியளவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்பதே அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்யவும் நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  சீமான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், சீமான் ஆஜராக நான்கு வார காலம் அவகாசம் வேண்டும் என கடிதம் எழுதியிருந்தார் இந்த நிலையில் தான் போலீசார் ஒட்டி இருந்த சம்மனை அவரது காவலர் பிரித்து எறிந்தார்
 

சீமான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மனுவையும் தற்போது உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால் சீமானுக்கு சிக்கல் வலுத்து உள்ளது. அவரது மனுவை டிஸ்மிஸ் செய்த உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் பலாத்கார புகார் என்பதால் இது தீவிரமானது விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றிருந்தாலும் போலீசாருக்கு விசாரணை செய்யும் அதிகாரம் உண்டு, 12 வாரங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில் தான் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று சீமான் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டு இருந்தது இன்று விசாரணைக்கு சீமான் ஆஜராகும் நிலையில் அவரிடம் ஆண்மை பரிசோதனை நடத்துவோம் போலீசார் திட்டமிட்டு இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு சீமான் அவரது மனைவி கயல்விழியும் நேரில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகாததால் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனைக் கண்டு ஆவேசமடைந்த அங்கு இருந்த சஃபாரி போட்ட காவலர் ஒருவர் போலீசாரை உள்ளே வரவிடாமல் தடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த போலீசார் அவரை வெளுத்தெடுத்து பின்னர் கைது செய்து ஜீப்பில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் சீமான் வீடு அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
 

இதையும் படிங்க: கலகலத்து வரும் நாம் தமிழர் கட்சி... மேலும் ஒரு மாவட்டச் செயலாளர் விலகல்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share