'காங்கிரஸ் கட்சியை முடித்து விடுங்கள்..' டெல்லி தோல்வியால் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆவேசம்..!
“உங்களுக்குள் இன்னும் அதிகமாகப் போராடுங்கள்” என்று கிண்டலான கருத்தை வெளியிட்டுள்ளார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி கட்சி 29 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.டெல்லியில் மொத்தம் 70 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அங்கு ஆட்சி அமைக்க 36 இடங்கள் தேவைப்படும். முன்னதாக, காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் முன்னிலை வகித்தது. இப்போது அது துடைத்தெறியப்பட்டதாகத் தெரிகிறது.
தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி- காங்கிரஸ் கட்சியின் மோசமான தோல்வி குறித்து எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி கட்சியினர் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர். இந்திய கூட்டணியின் முக்கிய கூட்டாளியான தேசிய மாநாடு கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முதல்வருமான உமர் அப்துல்லாவும் டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து எக்ஸ் தளத்தில் “உங்களுக்குள் இன்னும் அதிகமாகப் போராடுங்கள்” என்று கிண்டலான கருத்தை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட போதிலும், காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சியும் சட்டமன்றத் தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிட முடிவு செய்தன. இரு கட்சிகளின் தலைவர்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.பாஜகவின் "பி-டீம்" என்று கூட குற்றம் சாட்டினர்.
இதையும் படிங்க: டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றப் போவது யார்? பாஜக முன்னிலை.. ஆம் ஆத்மி பின்னடைவு
ஹரியானாவில் காங்கிரஸ் அவமானகரமான தோல்வியைச் சந்தித்த போதிலும் - 2014 முதல் பாஜக அங்கு ஆட்சியில் இருந்ததாலும், ஹரியானாவில் - கூட்டணி வைக்க வேண்டாம் என்று இரு கட்சிகளும் முடிவு செய்தன. ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தால் பாஜக தோல்வியை சந்தித்து இருக்கும்.அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான கட்சி, மாநிலத்தின் 90 சட்டமன்ற தொகுதிகளில் 6 தொகுதிகாளில் காங்கிரஸ் தோற்க காரணமாக இருந்தது. இறுதியில் காங்கிரஸ் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
டெல்லிக்கான தேர்தல் குறித்து உமர் அப்துல்லா, ''இந்தியா கூட்டணியின் தலைமை, செயல்பாடுகள் தெளிவாக இல்லை என்றும், அது மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டால் அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்' என்றும் கடந்த மாதம் கூறியிருந்தார்.
"டெல்லி தேர்தலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால் இதைப் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் களத்தில் உள்ள பிற கட்சிகள் பாஜகவை எவ்வாறு எதிர்ப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும். எனக்கு நினைவிருக்கும் வரை, இந்திய கூட்டணிக்கு கால அவகாசம் இல்லை. துரதிர்ஷ்டவசமாக, இந்திய கூட்டணி கூட்டம் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. எனவே தலைமை, செயல்பாடுகள் எங்கள் (இந்திய கூட்டணியின்) இருப்பு குறித்து தெளிவு இல்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி இருந்தால், அவர்கள் கூட்டணியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்" என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் கூறியிருந்தார்.
ஹரியானா தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கூட்டணியின் மீது கடும் விமர்சனங்களைச் சுமத்தியுள்ள நிலையில், நவம்பர் மாதம் மகாராஷ்டிராவில் ஷரத் பவார் தலைமையிலான என்சிபி மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கூட்டணி படுதோல்வியடைந்த பிறகு இந்திய கூட்டணி மேலும் பிளவுபடுவது போல் தோன்றியது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இந்திய கூட்டணியை வழிநடத்துவதற்காக களத்தில் இறங்கினார். மேலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவைப் பெற்றார். ஆனால் முடியவில்லை. இதனைததொடர்ந்து காங்கிரஸ் கூட்டணியின் தலைமையை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று அப்துல்லா கூறியிருந்தார்.
இதையும் படிங்க: மக்களவைத் தேர்தலோடு இண்டியா கூட்டணி அவ்ளோதானா.? சரத் பவார் போட்டாரே ஒரு போடு!