ஒன்றுபட்டால் வாழ்வு... இல்லையென்றால் தாழ்வு... எடப்பாடியை எச்சரித்த ஒபிஎஸ் ...!
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எத்தனை உரை வெற்றி பெற்றுள்ளது என ஓ பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒற்றை தலைமை ஏற்றால் தான் வெற்றி பெறுவோம் என கூறினார்கள் எந்த தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். அனைவரும் ஒன்றிணைந்தால் அதிமுகவிற்கு வாழ்வு இல்லையென்றால் தாழ்வு என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் கைலாசபட்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போத பேசிய அவர்.பஞ்சமி நிலத்தை நான் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியானது முதலில் அது பஞ்சமி நிலம் கிடையாது. அந்த இடத்தை சுப்புராஜ் என்பவரிடன் 2022 ஆம் ஆண்டு வாங்கினேன், அந்த இடம் குறித்து சிலர் புகார் அளித்ததன் அடிப்படையில் ஒரு ஏழு மாதத்தில் மீண்டும் அவரிடமே விற்றுவிட்டேன். எனக்கும் அந்த இடத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை . தற்போது வரை எனக்கு எந்த ஒரு நோட்டீஸ் -ம் வரவில்லை என விளக்கமளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் 50 ஆண்டு காலம் இரு தலைவர் உருவாக்கியது தான் அதிமுக. பைலா 45 விதியின் படி பொதுச்செயலாளர் பதவி திருத்தம் ரத்து செய்யக்கூடாது என்றும் தேர்தல் மூலமாக தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுப்பார்கள். அதிமுக விதியை மீறும் வகையில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்வை திருத்தம் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 'எடப்பாடி பழனிச்சாமி இல்லாத அதிமுக...' ட்விஸ்ட் வைக்கும் டி.டி.வி.தினகரன்..!
அதிமுக சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்ற உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதை வரவேற்கிறேன்.
அத்திக்கடவு அவிநாசி திட்டம் பில்லூர் அணை யில் இருந்து தண்ணீர் கொண்டு போவது தான் இந்த திட்டம். பம்பிங் செய்து அவிநாசி பகுதிக்கு கொண்டு செல்வதே இந்த திட்டம். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் இந்த கோரிக்கை மோடியிடம் வைத்தார்கள். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தராவிட்டால் நானே செய்து கொடுப்பேன் என ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியாக கூறினார். மாநில அரசின் நிதியை கொண்டு இத்திட்டத்திற்கு விதை போட்டவர் ஜெயலலிதா மட்டுமே. இந்த திட்டத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது .
செங்கோட்டையன் பாராட்டு விழாவை புறக்கணித்ததற்கு அவர்தான் பதில் கூற வேண்டும். அதிமுக வின் மூத்த நின்வாகி செங்கோட்டையன் தான். அவர் மீது எனக்கு எந்த அதிர்ப்தியும் கிடையாது. ஜெயலலிதா இருந்த போது நாடாளுமன்ற தேர்தலின் போது நானும் செங்கோட்டையனும் தான் பணி செய்தோம்.
என்னை தோற்கடிக்க 6 ஓ.பன்னீர்செல்வத்தை நிறுத்தினார் ஆர்.பி உதயகுமார். என்ன நடந்தது அதிமுக டெபாசிட் கூட வாங்கவில்லை. அதிமுக டெபாசிட் வாங்காதது எனக்கு வருத்தமாக உள்ளது. அதிமுகவிற்கு கிடைத்த இறையருள் எடப்பாடி பழனிச்சாமி என்ற கேள்விக்கு உதயகுமார் கூறியுள்ளார் என கேட்டதற்கு உதயகுமார் கருத்துக்கு எப்போதுமே நான் பதில் கூற மாட்டேன் அதை பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என தெரிவித்தார். நான், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் இணைவதற்கு தயராக உள்ளோம். எனக்கு எந்த ஒரு நிபந்தனையும் இல்லை.
அனைவரும் இணைந்தால் அதிமுக விற்கு வாழ்வு இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு தான் நான் உட்பட அதிமுகவில் இணைந்தால் பாஜகவிற்கு ஆதரவு கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர். நான் அதிமுகவில் இணைந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தால் தான் நல்லது என்று கூறுவேன்.
நடிகர் விஜய் குறித்து கேட்டதற்கு யப்பா சாமி என கூறிய அவர், தமிழர் நலன், தமிழர் பாரம்பரியம் , ஜாதிமதங்களுக்கு அப்பார்பட்டு பார்க்கின்ற நோக்கம் விஜயிடம் இருக்கிறதா என மக்கள் அறிந்து தீர்மானம் செய்து தான் அவர் வெற்றி தோல்வி.
பெரியரை பற்றி பல்வேறு சீர்திருத்தம் ஜாதி மத வித்யாசம் இல்லாதவர் என்ற கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது அவரது கருத்தை அண்ணா கூறியுள்ளார். ஜெயலலிதா வும் பின்பற்றினார் அப்போது நாங்கள் எப்படி பின்வாங்கப் .போறோம். பெரியார் கருத்திற்கு வலு ஊட்டியவர் ஜெயலலிதா அதில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம் . ஒற்றை தலைமை ஏற்றால் தான் வெற்றி பெறுவோம் என கூறினார்கள் . எந்த தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக உட்கட்சி பிரச்சனைக்கு பாஜக காரணமா? - செல்லூர் ராஜு பதிலடி...!