×
 

தமிழர்கள் முட்டாள்களா..? அமித்ஷா...! தெறிக்கவிட்ட ப.சிதம்பரம்..!

தமிழர்கள் எல்லாம் முட்டாள்களா என அமித்ஷாவை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார் ப.சிதம்பரம்.

தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக கட்சி கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரசின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் புள்ளி விவரங்களோடு அமித் ஷாவை தெறித்து விட்டார்.

அமித்ஷா சொல்றாரு தமிழர்கள் முட்டாள்கள் என நினைத்துக் கொண்டு நான் சொன்னால் நம்புவார்கள் என நினைக்கிறார், உங்களின் எண்ணிக்கை குறையாது என்று சொல்கிறாரே தவிர உத்தரப்பிரதேசத்தின் எண்ணிக்கை உயராது என்று சொல்லவில்லை, நமக்கு எவ்வளவு கிடைக்கும் என சொல்கிறாரா? மக்கள் கணக்கெடுப்பு படி மறு சீரமைப்பு செய்தால் உத்தரப்பிரதேசத்துக்கு 120, பீகாருக்கு 65 என ஆகிவிடும் மகாராஷ்டிரா 12 கோடி பேர் மக்கள் தொகை உள்ளதால் 65 பேர் எம்.பி ஆகி நாடாளுமன்றம் போவார்கள்.

இதையும் படிங்க: டெல்லியை கையில் எடுத்த அமித்ஷா..! கிரிமினல்களை தெறிக்கவிட முடிவு..!

840 பேர் கொண்ட புதிய நாடாளுமன்றத்தில், மற்ற மாநிலங்களில் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் போது நமது தமிழர்கள் 40 பேருடைய குரல் எப்படி எடுபடும்?

காங்கிரசுக்கு ஒரு மணி நேரம் கிடைக்கிறது, திமுகவுக்கு 30 நிமிடம் கிடைக்கிறது. 840 பேருக்கும் நேரத்தை பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்றால் நமக்கு ஒன்றுமே கிடைக்காது. 

இன்னொரு பேராபத்தும் இருக்கிறது. இதில் பீகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிராவில் வெற்றியடைந்தாலே மத்தியில் ஆட்சியைப் பிடித்து விடுவார்கள். தமிழகம் எல்லாம் தேவையில்லாமல் போய்விடும். இப்படி ஆட்சி அமைத்து விட்டால் தமிழர்களின் குரலை யார் கேட்பார்கள்? உன்னுடைய ஆதரவும் வேண்டாம் உன்னுடைய ஓட்டும் வேண்டாம் என்றுதான் போகும்.

இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்க்கியை, டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் எந்த அளவிற்கு அவமதித்தார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். இதேபோன்றுதான் நாம் டெல்லிக்கு சென்றால் தென்னாட்டு முதல்வர்களுக்கு என்ன மரியாதை கிடைக்கும். உக்ரைன் அதிபருக்கு வெள்ளை மாளிகையில் கிடைத்த அதே மரியாதை தான் தென்னாட்டு முதல்வர்களுக்கும் கிடைக்கும்.

யார் யாரை ஏமாற்றுகிறார்கள்? மத்திய கல்வி அமைச்சர் நமக்கு தெளிவுபடுத்த வேண்டும், எத்தனை வட மாநிலங்களில் ஆங்கிலத்திற்கு ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதை மத்திய அமைச்சர் விளக்கி சொல்ல வேண்டும். அங்கெல்லாம் ஆசிரியர்களே கிடையாது என மத்திய அமைச்சர் அமித் ஷாவையும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் ப. சிதம்பரம் தனது பேச்சின் மூலமாக தெறிக்கவிட்டார்

இதையும் படிங்க: தொகுதி மறுவரையறையைப் பண்ணவே கூடாது.. தமிழக முதல்வர் எதிர்ப்பை தொடர்ந்து கர்நாடக முதல்வர் தடாலடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share