×
 

பெண்களுக்காக பெண்களால், பிங்க் நிற ஆட்டோக்கள்... தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முழுக்க முழுக்க பெண்களே இயக்கும் பிங்க் நிற ஆட்டோக்களின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பெண்களுக்கான பிங்க் நிற ஆட்டோக்களின் சேவை தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து பிங்க் நிற ஆட்டோக்களின் சேவையை தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக 100 பிங்க் நிற ஆட்டோக்கள் தலைநகர் சென்னையில் ஓட உள்ளன. சமூகநலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் இந்த பிங்க் நிற ஆட்டோக்கள் வழங்கப்பட்டன. அதாவது இந்த ஆட்டோக்களை வாங்க ஒரு லட்ச ரூபாய் வரை தமிழக அரசு மானியமாக தந்துள்ளது. 

பெண்களே ஆட்டோ ஓட்டுநராக இருக்கும்போது பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பாக உணர்வார்கள் என்பது இதன் முதலாவது நோக்கம். பெண்களே ஓட்டுநராக இருப்பதால் அவர்களின் பொருளாதார தேவைகளுக்கு பிறரை நம்பாமல் தங்கள் சொந்தக்காலில் நிற்க ஏதுவாக இருக்கும் என்பது இதன் இரண்டாவது நோக்கம். இது இரண்டையும் இன்றைய சர்வதேச மகளிர் தினத்தில் அமல்படுத்தி இருப்பது கூடுதல் சிறப்பு என்கின்றனர் பயனாளிகள். இதுமட்டுமல்லாது இந்த ஆட்டோவில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதால் ஆட்டோ எங்கு பயணிக்கிறது, திட்டமிட்ட இலக்கை நோக்கி செல்கிறதா? திசை மாறி விட்டதா? போன்றவற்றை கண்டறிய உதவும். 

இதையும் படிங்க: லேடிஸ்! சென்னையில் இனி பயமில்லாமல் பயணிக்கலாம்..! 'பிங்க்' ஆட்டோ திட்டம் தொடக்கம்..!

நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கான அடையாள அட்டைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

முன்னதாக சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வீடியோ ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார். அதில் மாதந்தோறும் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை பெறுவதாக குறிப்பிட்டுள்ளார். அந்த தொகையை எங்கள் அண்ணன் ஸ்டாலின் தரும் சீர் என்று பெண்கள் உரிமையுடன், மகிழ்ச்சியுடன் கூறுவதாக அந்த வீடியோவில் முதலமைச்சர் பேசியுள்ளார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் போட்ட முதல் கையெழுத்தே பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் என்பது தான் என்று மு.க.ஸ்டாலின் நினைவுகூர்ந்துள்ளார்.

இந்த விடியல் பயணமானது மகளிரின் சேமிப்பை அதிகரித்து உள்ளது. அரசுப்பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்விக்கு செல்வதற்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது தான் புதுமைப்பெண் திட்டம் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னை அப்பா, அப்பா என்று பெண்கள் அழைக்கும்போது பூரித்து போவதாகவும் அந்த வீடியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: பெண்கள் பாதுகாப்பிற்காக அதிரடி... விரைவில் வருகிறது தமிழ்நாடு அரசின் அசத்தல் திட்டம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share