×
 

தமிழக மீனவர்களுக்கு பிப்ரவரி 5-ந் தேதி வரை காவல்...

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமேசுவரத்தைச் சேர்ந்த 34 மீனவர்களை வருகிற பிப்ரவரி 5-ந் தேதி காவலில் வைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில் ராமேசுவரம் மற்றும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ரூபில்டன், டேனியல், சச்சின் ஆகிய  3 பேருக்கு சொந்தமான படகுகளில் 34 மீனவர்கள் நேற்று தனுஷ்கோடிக்கும் - மன்னாருக்கும் இடையே நடுக்கடலில் வலைவிரித்து காத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்து பணிக்காக வந்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்தாக மேற்சொன்ன 3 விசைப்படகுகள் மற்றும் 34 மீனவர்களை அவர்கள் கைது செய்தனர். பிடிக்கப்பட்டவர்களை கிளிநொச்சி கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தமிழக மீனவர்கள் 34 பேரையும் வருகிற பிப்ரவரி 5-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: கவலைக்கிடமாக உள்ளது தமிழகம்.. கொந்தளித்த ஆளுநர் ஆர்.என். ரவி.!

நேற்று நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஆண்டில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவை நம்பி இருக்கும் தீவு நாடான இலங்கை, தமிழக மீனவர் விவகாரத்தில் தொடர்ச்சியாக அத்துமீறலை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டியதாக தமிழக மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் வலைகளை அறுத்து எறிவதும், விசைப்படகுகளை பிணையில் பிடித்து வைத்துக் கொள்வதும் என இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் எல்லை மீறிப் போகிறது.

மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் போதெல்லாம் அவர்களை மீட்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் இலங்கை அரசுக்கு பேசுகிறார். அதன்பிறகு படிப்படியாக மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர், ஆனால் படகுகள் விடுவிக்கப்படாமல் அங்கேயே வைத்துக் கொள்ளப்படுகிறது.

இதனால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அச்சப்படுவது ஒருபுறம், தங்கள் வாழ்வாதாரமான பல லட்சம் மதிப்பிலான விசைப்படகுகள் இலங்கை வசம் சிக்கிக் கொள்வது மறுபுறம் என ராமேசுவரம் மீனவர்கள் கடும் துயரில் அல்லல்படுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தமிழக மீனவ அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதையும் படிங்க: நடிகர் அஜித்குமார், கிரிக்கெட்டர் அஸ்வினுக்கு பத்ம விருது.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share