தந்தையை அடித்தே கொன்ற அன்பு மகன்..! பரிதாபமாக உயிரிழந்த போலீஸ் எஸ்ஐ.. சென்னையில் பரபரப்பு
பெற்றெடுத்த தந்தையை அடித்தே கொன்ற கொடூர மகன். சென்னையில் அரங்கேறி உள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் எஸ்பிசிஐடி பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் விஜயபாஸ்கர் 52 வயதான விஜயபாஸ்கர் குடும்பத்தோடு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலவாக்கம் முத்தாலம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார்.
விஜயபாஸ்கர் தனது தாய் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்திருந்ததால் தொடர்ந்து அவர் விமான நிலைய பணி முடித்து தன் தாய் வீட்டிற்கு சென்று தங்கி விடுவது வழக்கமாம். இதனால் விஜயபாஸ்கரின் மனைவியும் அவரது மகன் சுகாசும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவார்களாம். இந்த நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று விஜயபாஸ்கர் பாலவாக்கம் வீட்டிற்கு வராமல் தனது தாய் வீட்டிற்கு சென்று தங்கி விட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
அன்று தனது ஷிப்ட் முடித்து மீண்டும் பாலவாக்கம் வீட்டிற்கு வந்த விஜயகுமாரோடு 21 வயதான அவரது மகன் சுகாஸ் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஜனவரி 25ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தின் போது பெற்றெடுத்த தந்தை என்றும் பாராமல் மகன் சுகாஸ் தந்தை விஜயகுமாரை கடுமையாக காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளார்.
இதையும் படிங்க: மனைவியின் காதலனை போட்டு தள்ளிய கணவன்..! கருமத்தம்பட்டியில் பகுதியில் பரபரப்பு
சுகாஷ் தொடர்ந்து தாக்கியதில் போலீஸ் எஸ்ஐ விஜயகுமாரின் தாடை பகுதி முழுவதும் உடைந்து ஓங்கி அடித்ததில் காதில் இருந்தும் ரத்தம் வர தொடங்கி இருக்கிறது. நிலை குலைந்து போன விஜயகுமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கடந்த 25 ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த விஜயகுமார் தொடர்ந்து ஐ சி யு வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார்.
இது ஒரு ஒருபுறம் இருக்க தந்தையை அடித்து தாக்கிய மகன் சுகாசை நீலாங்கரை போலீசார் கைது செய்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையிலும் அடைத்தனர். கடந்த 15 நாட்களுக்கு மேலாக சுயநிலை இல்லாமல் கோமாவில் இருந்த போலீஸ் ஸ்டேஷன் விஜயகுமார் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
கொலை முயற்சியின் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகன் சுகாஷ் மீது தற்போது கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு வழக்கு நடைபெறுகிறது. பெற்றெடுத்த தந்தையை மகனே அடித்தே கொன்ற சம்பவம் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சையப் அலிகானை கத்தியால் குத்தியது நான்தான்... குற்றத்தை ஒப்புக்கொண்ட முகமது இஸ்லாம்....