×
 

அண்ணா அறிவாலயம் என்ன ரெட் லைட் ஏரியாவா? யாரை பார்த்து? திடீரென ஆவேசமான பொன் ராதா..!

நாகர்கோயிலில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் பாஜக தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன்

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் பாஜகவின் அண்ணாமலை இடையேயான வார்த்தை போர் தற்போது முற்றிக் கொண்டே செல்கிறது. மும் மொழி கொள்கை தொடர்பாக, திமுகவின் எதிர்ப்பும் பாஜகவின் ஆதரவும் தான் இதற்கு காரணம் ஆகும்.

மும்மொழிக் கொள்கையில் மூன்று பாடங்களை படிக்க வேண்டும் என மத்திய அரசு வற்புறுத்துவது. தமிழை அழிக்கும் செயல் என போர்க்கொடி தூக்கி மாபெரும் போராட்டம், ஆர்ப்பாட்டம், என வேகமான முறையில் தனது எதிர்ப்பை காட்டி வருகிறது திமுக.

திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னெப்போதும் இல்லாத அளவாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடுமையான வார்த்தை பிரயோகம் செய்யப்பட்டு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், என அனைவரையும் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பொன்.ராதாகிருஷ்ணன் காரில் மோதி பஸ்சில் சிக்கி வாலிபர் பலி - மற்றொருவர் படுகாயம்

உதயநிதியும் பாஜக தலைவர் அண்ணாமலையும் மாறி மாறி ஒருவருக்கொருவர் சவால் விடுத்துக் கொண்டு செல்லும் நிலையில் நீ வா பார்க்கலாம், வாடா போடா என ஒருமையில் பேசி மிக மோசமான நிலையில் விவாதம்  நடந்து வருகிறது.

இந்த நிலையில் நாகர்கோயிலில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் பாஜக தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் ஆவேசமாக, திமுகவையும் முதலமைச்சர் ஸ்டாலினையும் விமர்சனம் செய்தார்.

அண்ணாமலைக்கு சவால் விடுத்தது குறித்த கேள்விக்கு, அண்ணாமலை எதற்கு வர வேண்டும் நானே வருகிறேன் அறிவாலயத்திற்கு, நேரம், நாள், இடம் ஆகியவற்றை குறியுங்கள். நானே வருகிறேன் என ஆவேசமாக கூறினார்.

தமிழக முதல்வர் அவர்களே தமிழ்நாடு 8 கோடி மக்களுக்கும் சொந்தமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதில் அறிவாலயத்திற்கு முன்பாக வரக்கூடாது என சொல்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை. அது என்ன ரெட் லைட் ஏரியாவா? கேவலமான செயல் இது உங்களது வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டும்.

குழந்தைகள் அனைவரும் உங்களை அப்பா என சொல்கிறார்கள் எனக் கூறுகிறார்கள் சந்தோஷம்தான். ஆனால் இந்த பகுதிக்கு வரக்கூடாது என சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை உள்ளது?

செல்வி ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மதிமுக துவக்க காலத்தில் ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் ஊர்வலமாக வந்து அறிவாலயத்தை தாக்கக் கூடிய ஒரு சூழ்நிலை உருவானபோது. அன்றைக்கு அந்த அம்மா தான் உங்களை காப்பாற்றினார்கள். ஆனால் இன்று வேறு மாதிரி மாற்றி எங்களது பகுதிக்கு வந்து விடாதீர்கள் என்று கூறுவது மிகவும் தவறானது.

தற்போது சவால் விடுகிறீர்கள் என்று சொன்னால் நான் வருகிறேன் அதற்காக ரெட் லைட் ஏரியா என நான் சொன்னதற்கு போட்டியாக அதற்காக பொன் ராதாகிருஷ்ணன் வருகிறார, என கிண்டல் செய்தால் அதற்கு நான் பொறுப்பல்ல என்றும் கூறினார்.

 திமுக மற்றும் பாஜகவினர்  தொடர்ந்து இதுபோன்று நாகரிகம் தவறிய  மோசமான வார்த்தைகளால்  ஒருவருக்கொருவர் தனி நபர் தாக்குதல் செய்து கொள்வது கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: 'பஞ்சாயத்தை முடித்துக் கொள்வோமா உதயநிதி..? ஆனால், ஒரு சவால்..! அடங்காத அண்ணாமலை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share