×
 

மரணத்தின் அருகே போப் ஆண்டவர்.. குணம் அடைய உலகம் முழுவதும் பிரார்த்தனை..!

போப் ஆண்டவரின் உடல்நிலை மோசமாக உள்ள நிலையில், அவர் விரைவில் குணமடைய உலகம் முழுவதும் பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான 88 வயது போப் ஆண்டவர் பிரான்சிஸ், நிமோனியா மற்றும் சிக்கலான நுரையீரல் தொற்று நோயால் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு இருக்கிறார். 

ஏற்கனவே உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் தற்போது அவருக்கு தொடக்க கட்ட சிறுநீரக செயல் இழப்பும் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்துஅவர் குணமடைவதற்காக உலகளாவிய பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. 

நேற்று மருத்துவ பரிசோதனையின் போதுதான் போப் ஆண்டவருக்கு சிறுநீரகம் செயலிழப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. ஆனால் அவர் விழிப்புடன் பதில் அளிக்கும் விதத்தில் இருப்பதாகவும் திருப்பலியில் கலந்து கொண்டதாகவும் கத்தோலிக்க தலைமையகமான வத்திகான் அறிவித்திருக்கிறது. 

இதையும் படிங்க: போப் பிரான்சிஸ் உடல்நிலை மீண்டும் மோசம்; பதவியை ராஜினாமா செய்வாரா?

சனிக்கிழமை இரவு முதல் அவருக்கு சுவாச கோளாறுகள் எதுவும் இல்லை. ஆனால் ஆக்சிஜன் அதிக அளவு செலுத்தப்படுகிறது. சிறுநீரகத்தின் ஆரம்ப கால செயல் இழப்பு தெரிந்தாலும் அது கட்டுப்பாட்டில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

இதற்கு இடையில் போப் ஆண்டவர் குணம் அடைவதற்காக உலக நாடுகள் அனைத்தும் பிரார்த்தனைகளை நடத்தி வருகின்றன. அவருடைய சொந்த நாடான அர்ஜென்டினாவில் இருந்து கெயாரோவில் இருக்கும் சன்னி இஸ்லாத்தின் தலைமையகம் வரை, ரோமில் இருக்கும் பள்ளி குழந்தைகள் வரை பிரார்த்தனைகள் நடைபெற்றன. 

மரணத்தின் அருகே..

ரோமில் உள்ள கிறிஸ்தவ ஆலய தலைவர்கள் பகிரங்கமாக சொல்லாததை கார்டினல் திமோதி டோலன், "கத்தோலிக்க விசுவாசிகள் இறக்கும் தந்தையின் படுக்கையில் ஒன்று பட்டனர்"என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார். 

நமது பரிசுத்த தந்தை போப் பிரான்சிஸ் மிகவும் பலவீனமான உடல் நலத்துடன் இருக்கிறார். அனேகமாக மரணத்திற்கு அருகே இருக்கிறார் என்று  பிரசங்க மேடையில் இருந்து தனது வேத உரையில் கார்டினல் டோலன் குறிப்பிட்டார். இருப்பினும் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது பிரான்சிஸ் மீண்டும் எழுவார் என்று நம்புவதாகவும் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் சொன்னார். 

இந்த நிலையில் போப் ஆண்டவர் ராஜினாமா செய்வாரா? என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. ஏற்கனவே போப் ஆண்டவர் சொந்த நாடான அர்ஜென்டினாவின் தலைநகரில், "பிரான்சிஸ் இந்த நகரம் உங்களுக்காக ஜெபிக்கிறது" என்ற தலைப்பில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். மேலும்  நகரத்தின் சின்னமான தூபி ஒளிரச் செய்யப்பட்டது.

கெயாரோவில்போப் ஆண்டவர் உடன் நெருங்கிய பிணைப்பை உருவாக்கி இருந்த இமாம் அவருக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். "அன்புச் சகோதரர் போப் பிரான்சிஸ் விரைவாக குணமடையவும் மனித குலத்திற்கு சேவை செய்வதில் அவர் தனது பயணத்தை தொடரவும் நல்ல ஆரோக்கியத்தையும் நல் வாழ்வையும் வழங்கவும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன் என்று முகநூல் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 

அமெரிக்க யூத குழுவும் பிரார்த்தனை செய்தது. "இந்த சவாலான நேரத்தில் நாங்கள் எங்கள் கத்தோலிக்க சகோதர சகோதரிகளுடன் ஒன்றாக நிற்கிறோம் என்று தங்களது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்கள்.
 

இதையும் படிங்க: கர்ப்பிணி பெண்களை டாக்டர்கள் செக் செய்யும் வீடியோக்கள் ..! 2000 ரூபாய்க்கு விற்றது அம்பலம்..! குஜராத்தில் கொடூரர் 4 பேர் கைது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share