×
 

தவெக நிர்வாகிகளுடன் 2-வது நாளாக பிரஷாந்த் கிஷோர் ஆலோசனை..

தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுடன், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதலாவது மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்திக் காண்பித்தார். அந்த மாநாட்டில் தங்கள் கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் பிரகடனப்படுத்தினார். கூடவே தங்கள் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற புதிய யுக்தியை வெளியிட்டார்.

அதன்பிறகு சீரான இடைவெளியில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வந்த விஜய், மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தை முன்னெடுத்து வருகிறார். இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அவருக்கு தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டது. அதேபோன்று அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சி.டி.நிர்மல்குமாருக்கு துணை பொதுச்செயலாளர் பொறுப்பும், நடிகர் ராஜ்மோகனுக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டன.

இந்நிலையில், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோர், நடிகரும் - தவெக தலைவருமான விஜயை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜயின் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் இரண்டரை மணிநேரம் நீடித்தது. இந்த ஆலோசனையில், எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைப்பது, எத்தகைய பிரசார யுக்திகளை கையாள்வது, மக்களைக் கவர வெளியிட வேண்டிய அறிவிப்புகள் என முக்கிய அம்சங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.

இதையும் படிங்க: கூட்டணி ஆட்சி தான்.! வீடு வீடா போங்க.. மீண்டும் உறுதி செய்த த.வெ.க விஜய்!

இந்நிலையில், இரண்டாவது நாளாக பிரஷாந்த் கிஷோர் ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்கிறாராம். இந்தக் கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சி.டி.நிர்மல்குமார் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனராம். இந்த ஆலோசனையைப் பார்க்கும் போது 2026 தேர்தலை எதிர்கொள்ள தவெக, தனது தேர்தல் வியூக வகுப்பாளராக பிரஷாந்த் கிஷோரை தேர்வு செய்து விட்டதாக தெரிகிறது. 

ஏற்கனவே அரசியல் களத்தில் இறங்கி அடிக்கும் நடிகர் விஜய், இப்போது தேர்தல் வியூகத்தில் நிபுணத்துவம் பெற்ற பிரஷாந்த் கிஷோரையும் பக்கத்தில் வைத்திருப்பதை பார்க்கும்போது 2026 தேர்தல் களம் அனல் பறக்கப் போகிறது என்பதில் ஐயமில்லை.
 

இதையும் படிங்க: விஜய் கட்சிக்கு NO.. புதிய அமைப்பு தொடங்கிய ஜூனியர் ஓபிஎஸ்.. பரபரக்கும் அரசியல் களம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share