×
 

மார்ச் 2ஆம் தேதி ரமலான் நோன்பு தொடக்கம்..! தலைமை ஹாஜி அறிவிப்பு..!

ரமலான் நோன்பு மார்ச் 2 ஆம் தேதி துவங்குவதாக தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் நோன்பு மார்ச் 2 ஆம் தேதி முதல் துவங்குவதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

புனித மாதமாகிய ரமலான் மாதத்தில் தலை பிறை தோன்றியதும், இஸ்லாமியர்கள் முக்கிய கடமையாகிய நோன்பு எடுப்பார்கள். இறை கட்டளைக்கு கீழ்ப்படிந்து, தங்கள் பசி மற்றும் தாகத்தை கட்டுப்படுத்திக்கொண்டு, ஏழைகளின் பசி, தாக உணர்வை புரிந்துகொள்வதாகவும் ஏழைகளுகளின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு கொடுத்து மகிழ்விக்கும் மனப்பாங்கை நோன்பு உருவாக்கி கொடுக்கிறது என்றும் கூறுவார்கள் 

இதையும் படிங்க: முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் 6 தொகுதிகளில் 'ஆம் ஆத்மி' கட்சி வெற்றி 

நோன்பு கடமை நிறைவேறியபின்பு, ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த நாளன்று உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள், தங்கள் வழிபாட்டு ஸ்தலங்கள், மற்றும் பொது இடங்கள், திறந்த வெளியில் ஒன்று சேர்ந்து சிறப்பு தொழுகை செய்வது வழக்கமாகும்.

இந்த ஈகை திருநாளில் சிறப்பு தொழுகை செய்து முடிந்தபின்பு, புத்தாடை அணிந்து சுவையான உணவு வகைகளை செய்து குடும்ப, உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி வாழ்த்து கூறி அன்பை பரிமாறிக்கொள்கின்றனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு மார்ச் 2 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) துவங்குவதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க: டெல்லி: முஸ்லிம்கள் ஆதிக்கம் நிறைந்த10 தொகுதிகளில ஆம் ஆத்மி முன்னிலை

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share