×
 

இரட்டை இலை வழக்கில் அதிமுகவிற்கு நிவாரணம்...மீண்டும் மீண்டும் மோதும் நீக்கப்பட்ட டீம் மேட்ஸ்

அதிமுக பொதுக்குழு செல்லும், பொதுச்செயலாளர் தேர்வு செல்லும் என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்த பின்னரும் நீக்கப்பட்ட டீம் மேட்ஸ் மீண்டும் மீண்டும் வழக்கு போடுவதை வாடிக்கையாக வைத்துள்ள நிலையில் மீண்டும் ஒரு வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது.

அதிமுக பொதுக்குழு செல்லும், பொதுச்செயலாளர் தேர்வு செல்லும் என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்த பின்னரும் நீக்கப்பட்ட டீம் மேட்ஸ் மீண்டும் மீண்டும் வழக்கு போடுவதை வாடிக்கையாக வைத்துள்ள நிலையில் இந்த விவகாரத்தில் மீண்டும் ஒரு வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது.

அதிமுக உள்கட்சி விவகாரங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளில் முடிவு காணும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என உத்தரவிடக் கோரி சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு விசாரணையின் போது, சூரிய மூர்த்தியின் விண்ணப்பத்தை நான்கு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த உயர் நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது.

இதையும் படிங்க: நாயை இப்படியா விடுவீர்கள்..மளிகை கடை பெண்ணிடம் ரகளை ..Ex ஊராட்சி தலைவர் கைது ..!

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம், சூரியமூர்த்தி, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதற்கிடையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரியும், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரியும், முன்னாள் எம்.பிக்கள் ரவீந்திரநாத், கே.சி.பழனிச்சாமி மற்றும் ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்திருந்தனர்.

இதுசம்பந்தமாக பதிலளிக்கும்படி அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்தும், தடையை நீக்கக் கோரியும், பெங்களூரு வா.புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்  தேர்தல் ஆணையத்தில் மனு அளித்ததாகவும்,  உண்மைக்கு புறம்பான தகவல்களை அளித்து  தடை உத்தரவு பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என புகழேந்தி தரப்பில், நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான அமர்வில் முறையிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஜனவரி 27ம் தேதி விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
 

இதையும் படிங்க: எல்லை மீறி பேசுறீங்க சீமான்..அரசியலுக்கு நல்லது இல்ல..திருமா வார்னிங் !

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share