×
 

எஸ்.சி, எஸ்.டி மக்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது... ராகுல் கடும் தாக்கு..!

எஸ்.சி, எஸ்.டி மக்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தாழ்த்தப்பட்ட பட்டியல் இன வகுப்பினருக்கான தேசிய ஆணையம் என்பது அந்த ஜாதி மக்களின் சுரண்டலுக்கு எதிராக பாதுகாப்புகளை வழங்குவதற்கும் அவர்களின் சமூக கல்வி பொருளாதார மற்றும் கலாச்சார நாளன்களை மேம்படுத்துவதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசியல் அமைப்பாகும்.

இந்த பட்டியலின (எஸ்சி எஸ்டி) மக்களுக்கு எதிரான மனநிலையில் பாஜக செயல்படுகிறது என்று காங்கிரஸ் என்பியும் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தாக்குதல் தொடுத்தார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 'பட்டியலின சமூகத்தினருக்கான தேசிய  ஆணையத்தின் இரு முக்கிய பதவிகள் கடந்த ஓராண்டாக காலியாக உள்ளன. இதன் மூலம் ஆணையம் பலவீனப் படுத்தப்பட்டு உள்ளது.

சமூக அநீதிகளை எதிர்கொள்ளும் பட்டியலின மக்களுக்காக எஸ்.சி தேசிய ஆணையமே குரல் கொடுக்க வேண்டும். இப்போது பட்டியலின மக்கள் அளிக்கும் புகார்கள் குறித்து யார் நடவடிக்கை எடுப்பார்கள்? இதற்கு பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்.

இதையும் படிங்க: ‘100 கோடி மக்களையும் மோடி அரசு கடனாளியாக்கியுள்ளது’... மல்லிகார்ஜூன கார்கே கொந்தளிப்பு..!

மத்தியில் ஆளும் பாஜக, பட்டியலின மக்களுக்கு எதிரான மனநிலையில் செயல்படுகிறது. ஆணையத்தின் முக்கிய பதவிகள் உட்பட அனைத்து காலியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். அப்போதுதான் பட்டியலின மக்களின் நலன்களைப் பாதுகாக்க முடியும்"என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த கோரிக்கையின் மூலம் தேசிய தாழ்த்தப்பட்டவர் ஆணையத்தில் காலியாக உள்ள முக்கிய பதவிகள் குறித்து மத்திய பாஜக அரசை கடுமையாக கண்டித்து இருக்கிறார் ராகுல் காந்தி.

தனித்துக்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்கும் பொறுப்பை அது திறம்பட நிறைவேற்றுவது உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர் வலியுறுத்திருக்கிறார். 

இந்தப் போக்கு பாஜக அரசின் தலித் எதிர்ப்பு மனநிலையின் வெளிப்பாடு என்றும் ராகுல் சாடி இருக்கிறார்.

இதையும் படிங்க: தினம், தினம் ஷுட்டிங் நடத்துகிறீர்கள்... முதலமைச்சர் மீது பாயும் அண்ணாமலை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share