×
 

கைது பயத்தில் சீமான்... சென்னையில் கால் வைத்த மறுகணமே பதறியடித்துக் கொண்டு செய்த செயல்...!

சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

 சேலத்திலிருந்து சென்னை வந்தடைந்த சீமான் சென்னை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். நடிகை பாலியல் தொல்லை புகார் தொடர்பாக வழக்கு தொடுத்த நிலையில் அது தொடர்பாக இன்றைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று இரவு 8:00 மணிக்கு அவர் ஆஜராக இருப்பதாகவும் அவரே கூறியிருந்தார். 

இந்நிலையில்தான் தற்போது சென்னை வடபழனியில் இருக்கக்கூடிய ஒரு ஹோட்டலுக்கு அவர் வருகை புரிந்திருக்கிறார் அங்கு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் என்ன செய்வது என்பது தொடர்பாக தற்போது சீமான் ஆலோசனை மேற்கொள்ளவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: அந்தப் பெண்ணோடு அரைமணி உட்கார்ந்தால் எல்லாம் முடிந்துவிடும்- சிணுங்கும் சீமான்

நடிகை தொடர்ந்த வழக்கில் இன்றைய தினம் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க இருக்கக்கூடிய சூழலில், தற்பொழுது வடபழனியில் இருக்கக்கூடிய கிரீன் பார்க் ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு இவரோடு அந்த கட்சியை சேர்ந்த சேர்ந்த முக்கிய  வழக்கறிஞர்களுக்கு வந்திருக்கிறார்கள். 

விமான நிலையத்தில் அதாவது சேலத்திலிருந்து இன்றைய தினம் சென்னை விமான நிலையம் வந்த சீமானை, அங்கேயே சென்று வழக்கறிஞர் பிரிவைச் சார்ந்தவர்கள் எல்லாம் வந்து அழைத்து வந்தார். அங்கிருந்து  கிரீன் பார்க் ஹோட்டலுக்கு வந்தடைந்த சீமான், வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விசாரணைக்காக இன்றைய தினம் ஆஜராக இருக்கக்கூடிய நிலையல்,  பாலியல் வழக்கு தொடர்பாக தந்து கட்சி வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

ஒருவேளை கைது செய்தால் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தங்கள் தரப்பு வாதத்தை என்ன மாதிரி முன்வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கக்கூடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கறிஞர் பிரிவு சார்ந்தவர்கள் மற்றும்  கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் கூட உடன் இருக்கிறார்கள். 

 ஒருபுறம் சம்மன்கிழிக்கப்பட்ட அந்த விவகாரம் என்பது ஒருபுறம் பேசுபொருளாகியுள்ளது.  சற்று நேரத்திற்கு முன்பாக கூட செய்தியாளரை சந்தித்த சீமான், அழைப்பாணை ஒட்டப்பட்டது தொடர்பாகவும், தனது காவலாளியைக் கைது செய்ததற்கும் காவல்துறையைக் கடுமையாக கண்டித்திருந்தார். 

இது ஒருபுறம் இருக்க தற்பொழுது காவல்நிலையத்தில் இரவு எட்டு மணிக்கு வந்து  ஆஜராக இருக்கக்கூடிய சூழலில் கைது நடவடிக்கைகளை எதிர்கொள்வது தொடர்பாகவும், காவல்துறையினரின் விசாரணையை எதிர்கொள்வது தொடர்பாகவும்  வழக்கறிஞர்களோடு சீமான் ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
 

இதையும் படிங்க: 15 வருடமா என்னையும், என் குடும்பத்தையும் கற்பழிக்கிறீங்க... பகீர் கிளப்பும் சீமான்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share