×
 

வழக்கு நிலுவையில் உள்ளபோது எப்படி பாலியல் குற்றவாளி என்று கூறுவீர்கள் - சீறும் சீமான்

வழக்கு நிலுவையில் உள்ள போது தன்னை எப்படி பாலியல் குற்றவாளி என்று கூறுவீர்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுத்தாக்கல் செய்த நிலையில் அதனை நீதிபதிகள் நிராகரித்தனர். மேலும் வழக்கு விசாரணைக்கு மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

இதையும் படிங்க: சீமானுக்கு மத்திய அரசு 'Y' பிரிவு பாதுகாப்பு..? அமித் ஷாவுக்கு ரிப்போர்ட் கொடுத்த சென்ற உளவுத்துறை..!

தொடர்ந்து காவல் நிலையத்தில் ஆஜரான சீமானிடம் கேள்விகளுக்கான பதில்களை கோயம்பேடு காவல் இணை ஆணையர் அதிவீரபாண்டியன் மற்றும் வளசரவாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செம்பேடு பாபு ஆகியோர் கேட்டு விசாரணை நடத்தினர்.

இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வழக்கு நிலுவையில் உள்ள போது தன்னை எப்படி பாலியல் குற்றவாளி என்று கூறுவீர்கள் என்று கேள்வி எழுப்பினார். எது கண்ணியம்.. இந்த நாட்டை கண்ணியவான்கள் ஆளுகிறார்களா என்று காட்டமாக பேசிய சீமான், என்னைப் பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். 

நடிகை ஒரு பாலியல் தொழிலாளி என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக கூறிய சீமான், ஒரு சமூகத்தை நேசிக்கும் மகனை தினமும் அவமானப்படுத்துகிறீர்கள் என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் குறித்து கனிமொழியின் கருத்து என்ன என்றும் கேள்வியை முன்வைத்தார்.

 

 

 

 

இதையும் படிங்க: அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வம் இணைப்பா..? இப்படி சொல்லிட்டாரே அதிமுக மூத்த தலைவர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share