×
 

உனக்கு எல்லாம் அறிவுன்னு ஒண்ணு இருக்கா...இல்லையா?.... விஜயை வெளுத்து வாங்கிய சீமான்..!

வியூக வகுப்பாளரை வைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு வரும் தவெக தலைவர் விஜயை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். 

வியூக வகுப்பாளரை வைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு வரும் தவெக தலைவர் விஜயை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். 

செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பன்னெடுங்காலமாக அரசியலே செய்றீங்க நீங்க மக்கள் அரசியலையே பேசமாட்டீங்க முன்னெடுக்க மாட்டீங்க தேர்தல் வியூக வகுப்பாளர், தேர்தல் வியூகம், ஸ்டேட்டஜி, அப்படின்னா தேர்தல்ல வெல்றது மட்டுமே ஆன வியாபாரமா இருக்கிறது. ஊடகங்களை வாங்குவது, அவர்களுக்காக பேசுவது, இந்த செய்தியை இப்படி போடுங்கள், அந்த செய்தியை அப்படி போடுங்கள் என்பதெல்லாம் வெறும் தேர்தல் அரசியல் தான். மக்களுக்கான அரசியல் எப்போது வரும், மக்கள் எத்தனை பிரச்சனைகளை முன்வைக்கிறார்கள், எத்தனை போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். அதற்கான தீர்வு என்ன, பிரச்சனைக்கான காரணம் என்ன என்பதை நோக்கி நகருகிற அரசியல் தான் இங்கே தேவை எனக்கூறினார். 

தம்பி விஜய் கட்சியில் ஜான் ஆரோக்கியசாமி ஒரு வியூக வகுப்பாளர், தம்பி ஆதவ் அர்ஜுனா ஒரு வியூக வகுப்பாளர். அவங்க ரெண்டு பேருமே இந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள். இவர்கள் இல்லாமல் பீகாரில் இருந்து பிரசாந்த் கிஷோர்ன்னு ஒருத்தர் வரணும், ஆந்திராவிலிருந்து சுனில் என்ற நபர் வர வேண்டும் என்றால் உங்களுக்கெல்லாம் மூளைன்னு ஒண்ணு இருக்கா அறிவுன்னு இருக்கா  ஒண்ணு இல்லையா?. வெளியிலிருந்து பார்க்கிறவன் தமிழ்நாட்டுல ஒருத்தன் கூட ஒன்னும் இல்ல பீகார்ல இருந்து வந்து எவனாவது சொல்லிக் கொடுக்கணும், இல்ல ஆந்திரால இருந்து வந்து சொல்லிக் கொடுக்கணும் என நினைப்பார்கள் என கடுமையாக சாடினார். 

இதையும் படிங்க: மாட்டிக்கின்னாரு ஒருத்தரு... ஜான் ஆரோக்கியசாமியுடன் சீமான் வைத்த கூட்டு... நாதகவுக்கு தவெக வைத்த குட்டு..!

தற்போது அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், திமுகவில் உள்ள துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, திருச்சி சிவா இவர்களை எல்லாம் தாண்டி பெரிய கொம்பனா பிரசாந்த் கிஷோர். ஏற்கனவே ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனான்னு ரெண்டு பேரும் இருக்காங்களே. ரெண்டு பேருமே வேலை செஞ்ச நல்ல கெட்டிக்காரங்க தான். அப்புறம் இவன் எதுக்கு பீகார்ல இருந்து ஒருத்தன். பீகார்ல இருக்கறவனுக்கு அறிவு இருக்கு தமிழ்நாட்டுல இருக்கறவனுக்கு அறிவு இல்லையா?. இங்கேயே பொறந்து வளர்ந்தவனுக்கு உலகத்துக்கு அறிவை கடன் கொடுத்தவன் தமிழன. என்னை விட்டால் இந்தியாவுக்கே ஸ்டேட்டஜி பண்றேன், கொஞ்சம் காசு கொடு. ஏன் அகில உலகத்துக்கு ட்ரம்புக்கு எல்லாருக்கும் நான் ஸ்டேட்டஜி பண்றேன் என்றார். 

இதையும் படிங்க: ஒரே ஒரு முட்டை வீச்சுக்கே பயந்திட்டீங்களா விஜய்..? 'ஒய்'பிரிவு பாதுகாப்புக்காக கதறும் சீமான் தம்பிகள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share