×
 

என் வாழ்க்கைய சீரழிச்சிட்டு வித்தை காட்டாத சீமான்..! நடிகையின் நியூ வீடியோ வைரல்..!

சீமான் எங்கு சென்றாலும் தானும் போய் போராடுவேன் என நடிகை விஜயலட்சுமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜய லட்சுமி புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், தானே சென்று தலையைக் கொடுத்தது போல, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என சீமான் தரப்பு கோரியுள்ளது.

வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கருதிய நீதிமன்றமோ, 3 மாத காலத்துக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. 

இதையடுத்து, சீமானுக்கு சம்மன் அனுப்பிய காவல்துறை, அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது. அதனை கிழித்த விவகாரம், களேபரமாக மாறியது ஒருபக்கம் இருக்கும்போது, ஆதரவாளர்கள் சூழ விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜர் ஆகி விசாரணைக்கு ஆளாகினர் சீமான். 

இதையும் படிங்க: முதலில் திமுகவினரை தமிழை ஒழுங்காகப் பேசச்சொல்லுங்கள் பார்ப்போம்..? சீமான் சவால்..!

சீமான் கைதாகி விடுவாரோ என்ற பேச்சுக்கள் அடிப்பட்ட நிலையில், அவரை கைது செய்யப்போவதில்லை என காவல்துறை தரப்பு தெரிவித்து விட்டது. 

இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பு மனுத்தாக்கல் செய்தது. இவை அனைத்தும் அரசியல் காரணங்களுக்காகவே நிகழ்த்தப் படுவதாகவும், விசாரணையை நிறுத்தி வைக்குமாறும் சீமான் தரப்பு கோரியது. சமாரசமாக பேசி முடிவெடுங்கள் என உச்சநீதிமன்றம் கூறி, விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.

இதனால் சீமான் நிம்மதி பெருமூச்சு விட, தனக்கு நியாயம் கிடைக்கப்போவதில்லை, அதனால் இனி சீமான் விஷயத்தில் தலையிட மாட்டேன் என நடிகை விஜயலட்சுமி கூறிவிட்டார்.

இதோடு பிரச்சனை தணிந்தது போல என எண்ணும் நேரத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டார் நடிகை விஜயலட்சுமி.

சீமான் எங்கு சென்றாலும் தானும் போய் போராடுவேன் என சபதம் எடுத்துள்ளார் விஜயலட்சுமி… தனக்கு செட்டில்மென்ட் கொடுத்து விட்டார்களோ என்ற சந்தேகம் பலருக்கு இருப்பதாகவும், தனக்கு எந்த விதமான செட்டில்மென்ட் கொடுக்கவில்லை, இழப்பீடு கொடுக்க பேசி வருவதாக சீமான் தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் கூறி வந்த நிலையில், எந்த இழப்பீடும் கொடுக்கப்போவதில்லை என சீமான் பேட்டி அளிக்கிறார். அதனால் பலருக்கு சந்தேகம் வந்துவிட்டதாக தெரிவித்தார்.

சீமான் மீது தவறு இல்லை என்றால் போலீசார் விசாரணைக்கு பதில் கொடுத்திருக்க வேண்டும்... எங்கு உண்மை வெளிவந்து விடுமோ என்ற பயத்தில் உச்ச நீதிமன்றம் போய், ஸ்டே வாங்கி விட்டதாக கூறியுள்ளார். 

தப்பை மறைத்து தப்பிக்க அரசியல் பின்புலம் இருப்பதாக சீமான் கூறி வருவதாகவும், 14 வருடங்களாக தன்னை பாலியல் தொழிலாளி என சீமானும், நாம் தமிழர் கட்சியினரும் கூறி வருவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதிடுவேன் என கூறியுள்ளார். தன்னை பாலியல் தொழிலாளி என சொல்லிவிட்டால் பயந்துபோய் விட்டுவிடுவேன், அனைவரும் காலப்போக்கில் மறந்து விடுவார்கள் என சீமான் நினைப்பதாக தெரிவித்துள்ளார்.

 

 

இதையும் படிங்க: டாஸ்மாக்கில் ரூ1 லட்சம் கோடி ஊழல்: திமுகவை காப்பாற்றும் பாஜக..? கொளுத்திப்போடும் சீமான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share