×
 

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணிற்கு பாலியல் தொல்லை ... கீழே தள்ளிவிட்டு தப்பிய இருவருக்கு வலைவீச்சு ...!

வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளி விட்டு தப்பி ஓடிய இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த 4- மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணியாற்றி வருகிறார்.

 

இந்நிலையில் இன்று தனது சொந்த ஊரான சித்தூருக்கு செல்வதற்கு கோயம்புத்தூர் to திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி பயணிகள் விரைவு ரயிலில் பயணம் செய்தபோது இரண்டு பேர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் மூன்று பள்ளி 'சார்'கள் சிறுமிக்கு செய்த அட்டூழியம்... ஸ்டாலின் அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு.!

 கழிவறைக்கு சென்றபோது அங்கும் சென்றும் தொடர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நிலையில் கர்ப்பிணி பெண் கூச்சலிட்டதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த நபர்கள் நாலு மாத கர்ப்பிணி பெண்ணை வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது  கீழே தள்ளியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கர்பிணியை மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டதில் அந்தப் பெண்ணிற்கு கை, கால் முறிவு ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

கர்ப்பிணி பெண்ணை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட நபர்களை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கழிவறைக்குள் வைத்து பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை; அடுத்தடுத்து அத்துமீறிய 3 ஆசிரியர்கள் இரவோடு, இரவாக கைது! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share