×
 

தமிழ் தெரியலனா அரசு வேலைய இழக்கணும்..? பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு..!

மின்வாரிய பணியில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ் தேர்வில் தேர்ச்சி பெறாத ஊழியரை, மீண்டும் வேலையில் அனுமதிக்கும் விவகாரத்தில் பரிசீலனை தேவை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்குமார். இவர், மின்வாரியத்தில் இளநிலை உதவியாளராக, 2018ல் பணியில் சேர்ந்துள்ளார். பள்ளியில் தமிழ் படிக்கவில்லை எனில், டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தமிழ் தேர்வில் இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்பது மின்வாரிய பணி விதிமுறை.

இந்த நிலையில், ஜெய்குமாரால், அத்தேர்வில் குறித்த காலத்தில் தேர்ச்சி பெற முடியவில்லை. அதனால், பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது. அதனை ரத்து செய்து, பணியில் தொடர அனுமதிக்க உத்தரவிடக்கோரி, அவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இதையும் படிங்க: இந்தி மொழிய திணிக்காதீங்க..! மொழிச் சமத்துவமே திமுகவின் இலட்சியம் - முதல்வர் ஸ்டாலின்..!

அப்போது, கடந்த, 2022ல் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நடத்திய விசாரணையில், மனுதாரரின் பெற்றோர் தமிழர்கள். அவரது தந்தை கடற்படை அதிகாரியாக இருந்தார். அவர் பல்வேறு இடங்களில் பணிபுரிந்ததால், மனுதாரரும் பிற மாநில பள்ளிகளில் படிக்க வேண்டியிருந்தது. அச்சூழலில் ஹிந்தியை இரண்டாம் மொழியாக படித்தார் எனவும் இம்மண்ணின் பக்கா தமிழனாக இருக்கும் மனுதாரரை துாக்கி எறிவது சரியல்ல என்றும் கூறி பணியில் அனுமதிக்கலாம் என கூறியதாக தெரிகிறது. 

இதை எதிர்த்து, தமிழக மின்வாரிய தலைவர், தலைமை பொறியாளர் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்ததில், தமிழகத்தில் தமிழில் புலமை இல்லாத ஒருவரை அரசு பணியில் நியமனம் செய்வது தொடர்பான பிரச்னை இது என்றும் தமிழில் போதிய அறிவு பெற தவறினால், ஒருவர் அரசு பணியில் இருக்கும் உரிமையை இழக்க நேரிடுமா என்பது பரிசீலிக்கப்பட வேண்டிய விவகாரம் எனவும் தெரிவித்தனர். மேலும், தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்ததுடன், விசாரணையை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: தமிழர்களின் தனித்துவமான குணம் சுயமரியாதை.. அதை சீண்டி பாக்காதீங்க..! எச்சரிக்கும் முதல்வர் ஸ்டாலின்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share