KCRக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியவர் கொலை..! தெலுங்கானாவில் அட்ராசிட்டி..!
முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, நீதிமன்றம் சென்று வாதாடிய சமூக ஆர்வலர் கொலை
கடந்த 2013 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் தெலங்கானா முதலமைச்சராக சந்திரசேகர ராவ் பதவி வகித்தார். இவரது ஆட்சி காலத்தில் 2023 ஆம் ஆண்டு காலேஸ்வரம் திட்டத்தின் ஒரு பகுதியாக மேடிகட்டா பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டது. ஆனால் இந்த தடுப்பணை சில தூண்கள் 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் இடிந்து விழுந்தன. இதன் காரணமாக தடுப்பணை கட்டுவதில் ஊழல் நடந்துள்ளதாகவும், கட்டமைப்பில் சில குறைபாடுகள் இருப்பதாகவும், தெலங்கானா மாநிலம் ஜெய்சங்கர் பூபால பள்ளி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் நாகவெல்லி சரளாவின் கணவர் ராஜலிங்கமூர்த்தி போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவரது புகாரை ஏற்க போலீசார் மறுத்துள்ளனர். இதன் காரணமாக உள்ளூர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ், அவரது மருமகனும் முன்னாள் அமைச்சருமான டி. ஹரிஷ் ராவ் ஆகியோர் மீது ஊழல் குற்றம் சாட்டியிர்ந்தார். பூபல்பள்ளி மாவட்ட நீதிமன்றம் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு சந்திர சேகர ராவுக்கும், அவரது மருமகனுக்கும் நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில் இதனை மறுத்த சந்திரசேகர ராவ் தரப்பு, உயர்நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் அவர்களது மனு நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ராஜலிங்கமூர்த்தி மர்ம நபர்கள் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: 21 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த 'அந்த' பொருள்! ஸ்கேன் செய்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி..!!
நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அம்பேத்கர் சவுக்கிலிருந்து தெலங்கானா நிலக்கரி சுரங்கத் தொழிலாளர் சங்க அலுவலகம் வழியாக ரெட்டி காலனிக்கு தனது பைக்கில் ராஜலிங்கமூர்த்தி சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வழிமடக்கி நிறுத்தி கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவரை, உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தமர். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். டிஎஸ்பி சம்பத் ராவ் மற்றும் சி.ஐ. நரேஷ் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு வந்து குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்தனர்.
சந்திரசேகர ராவ் மீது ஊழல் குற்றம் சுமத்தி நீதிமன்ற சென்றதால் அவரை சந்திரசேகர் ராவின் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியினர் கொலை செய்துவிட்டனர் என்று ஆளும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி, காங்கிரஸ் கட்சியின் குற்றசாட்டை மறுத்துள்ளது. ஏற்கனவே ராஜலிங்கமூர்த்தி, ஒரு வி.ஆர்.ஓ.வையும், ஒரு பாரஸ்ட் ஆபிசரையும், ஒரு தாசில்தாரையும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் பிடித்து கொடுத்துள்ளார். அப்போதிருந்து அவர் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.
இதுமட்டுமல்லாமல் ரேணிகுண்டா என்பவரின் குடும்பத்தினர் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் ராஜலிங்க மூர்த்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனால் கடந்த 15 நாட்களாக, ராஜலிங்கமூர்த்தி மற்றும் ரேணிகுண்டாவின் குடும்பத்தினர் இடையே தகராறு எழுந்து வந்தது. சமீபத்தில் ரேணிகுண்டாவின் குடும்பத்தினர் டிஎஸ்பியிடம் புகார் அளித்தனர். புகார் அளித்த ஒரு வாரத்திற்குள் ராஜலிங்கமூர்த்தி கொலை செய்யப்பட்டிருப்பது பல சந்தேகங்களை எழுப்பு உள்ளது. இந்நிலையில் இந்தக் கொலை தொடர்பாக பூபல்பள்ளி போலீசார் ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சஞ்சீவ் ரெங்குன்ட்லா, ஸ்ரீமந்த் பிங்கிலி, குமார் மோர், குமார் கோதுரி மற்றும் கொமுரையா ரேணுகுன்ட்லா ஆகியோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மருமகனுக்கு தீ வைத்த மாமியார்..! தீயில் கருகிய உடலை பார்த்து ரசித்த குரூரம்..!