×
 

தெலுங்கு படிச்சே ஆகணும்.. ! 9,10ம் வகுப்பு சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ, ஐ.பிக்கும் கட்டாயம் அமல்..!

தெலங்கானாவில் 9, 10ம் வகுப்பு பயிலும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் ஐபி மாணவர்களுக்கு தெலுங்கு பாடத்தை கட்டாயமாக்கி தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

தெலங்கானாவில் 9 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி மற்றும் இதர கல்வி வாரியங்களும் அடுத்த 2025-26 கல்வியாண்டு முதல் தெலுங்கு பாடத்தை கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என தெலங்கானா  அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தெலங்கானா கல்வித்துறை செயலர் யோகிதா ராணா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

2026-27ம் ஆண்டு கல்வி ஆண்டு தொடக்கத்தில் இருந்து மாநிலத்தில் 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி மற்றும் இதர கல்வி வாரியங்களும் தெலுங்கு மொழிப்பாடத்தை கண்டிப்பாக கற்றுக்கொடுக்க வேண்டும். வழக்கமான தெலங்கு “சிங்கிடி” பாடத்துக்கு பதிலாக தெலுங்கு “வெண்ணிலா” 089 என்ற எண்ணில் சிபிஎஸ்இ பிரிவில் கற்றுக்கொடுக்க வேண்டும்.  

இதையும் படிங்க: விவசாய நிலத்தில் சிதறிக்கிடந்த ரூபாய் நோட்டுகள்.. கட்டுக்கட்டாக பணத்தை வீட்டிற்கு அள்ளிச் சென்ற விவசாயிகள்.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த உண்மை..

தெலங்கானா கல்விச் சட்டம் 2018ன் கீழ், பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை தெலுங்கு மொழி கற்பிப்பதும், கற்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி பள்ளிகளுக்கும் பொருந்தும். பல்வேறு காரணங்களுக்காக முந்தைய அரசு இந்த திட்டத்தை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்த இயலாமல் இருந்திருக்கலாம். ஆனால், தெலங்கானாவில் அமைந்துள்ள புதிய அரசு, தெலுங்கு மொழியை மாநிலம் முழுவதும் பள்ளிகளில் கட்டாயமாக்க விரும்புகிறது அதற்கான நடவடிக்கையை இப்போது எடுத்துள்ளது.

இதற்கான முடிவை செவ்வாய்கிழமை  முதல்வர் ரேவந்த் ரெட்டி எடுத்ததோடு, தெலுங்கு மொழி கற்பித்தலை எளிமையாக்க, எளிமை தெலுங்கான வெண்ணிலா பாடத்தை 9 மற்றும் 10ம் வகுப்புகளில் படிக்கவும் உத்தரவிட்டுள்ளார். தெலுங்கு அல்லாத மாநிலங்களில் இருந்து வந்து, தாய்மொழி தெலுங்கு அல்லாதவர்கள்  தெலங்கானாவில் பயிலும் மாணவர்கள்கூட தெலுங்கு மொழியை எளிமையாகக் கற்கும் விதத்தில் வெண்ணிலா தெலுங்கு பாடம் அமைந்திருக்கும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கும், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் இடையே மொழிப்போர் தீவிரமடைந்துள்ள நிலையில் தெலங்கானா அரசு சத்தமில்லாமல் தெலுங்கை கட்டாயமாக்கியுள்ளது. தேசிய கல்விக்கொள்கையில் 3வது மொழியை மாணவர்கள் தங்கள் தேர்வாக எதை வேண்டுமானாலும் படிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது இந்தி மொழியின் திணிப்பு என்று திமுக வாதிடுகிறது. ஆனால், மத்திய அரசோ மாணவர்கள் 3வது மொழியை கற்கலாம், இதில் இந்தி என்பது கட்டாயமல்ல என்று தெரிவித்துள்ளது.

3 மொழிக் கொள்கையை தமிழகம் அமல்படுத்தாவிட்டால், மத்திய அரசிடம் இருந்து ரூ.2400 கோடி நிதியை தமிழகம் பெற முடியாது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இந்த மும்மொழிக் கொள்கையைக் கொண்டுவருவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் மத்திய அமைச்சரின் இந்த  பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது கூட்டுறவு கூட்டாச்சி தத்துவத்தை நேரடியாக பாதிப்பதாகும், நிதி நிறுத்துவதால் மாணவர்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கத்தி கூப்பிட்டாலும் ரெஸ்பான்ஸ் இல்லை.. 2 நாட்களாக தொடரும் மீட்பு பணிகள்.. சுரங்கத்தில் சிக்கிய 8 பேரில் நிலை என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share