×
 

"அந்த சார்" கண்டிப்பாக ஒரு "அரசியல்வாதி" தான்..குண்டை தூக்கிப்போட்ட இசையமைப்பாளர் தீனா..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் குற்றம் சுமத்தப்படும் அந்த சார் கண்டிப்பாக ஒரு அரசியல்வாதி தான் என அடித்து சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் தீனா

சென்னை மதுரவாயல் வானகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மூகாம்பிகை மூகாம்பிகை கோயிலில் அதன் நிறுவனரான பூ பாண்டியனின் 68வது ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு விலையில்லா புடவை கோயில் சார்பாக வழங்கப்பட்டது. அத்துடன் மக்களுக்கு அன்னதானமும் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ க வில், வெளிநாடு மற்றும் அண்டை மாநில, தமிழ் வளர்ச்சிப் பிரிவு மாநிலத் தலைவராகவும் ,திருடா திருடி உள்ளிட்ட பல படங்களுக்கு, இசை அமைத்தவருமான தீனா கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக தகவல் தெரிந்தும் முதலமைச்சர் இன்னும் ராஜினாமா செய்யாமல் இருப்பது மிகவும் கடினமான ஒன்று. அண்ணாவின் பெயர் கொண்ட பல்கலைக்கழகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது வெட்கக்கேடானது. அண்ணா பல்கலைக்கழகத்தில் குற்றம் சுமத்தப்படும் அந்த சார்? கண்டிப்பாக ஒரு அரசியல்வாதி தான். ஆனால் அது யார் என்பது புதிராக உள்ளது என்றார்.

 மத்திய அரசிடம் இருந்து வாங்கும் நிதிக்கு தமிழக அரசு முறையாக கணக்கு காட்டுவது இல்லை. மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூபாய் 1000 நிதி உதவியில் கூட தகுதி உள்ளவர்கள் தகுதி இல்லாதவர்கள் என பிரித்து மக்களை கஷ்டப்படுத்துகிறார்கள். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பொங்கலுக்கு தரவேண்டிய ஆயிரம் ரூபாயை தராமல் மக்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளனர். ஏழை மக்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை கூட ஆயிரம் ரூபாயை இந்த அரசால் கொடுக்க முடியவில்லை என்பது வெட்கக்கேடானது என்று விமர்சனம் செய்தார்.

இதையும் படிங்க: என்ன ஆச்சு ராஜா குடும்பத்துக்கு ..திடீர் உடல் நலக்குறைவு ..மருத்துவமனையில் கங்கை அமரன்..!

கோயில் நிகழ்ச்சிகளை பாஜகவினர் முன்னெடுப்பதற்கு அச்சுறுத்தல் உள்ளது. மக்கள் பிரச்சினைகளை பாஜக தொண்டர்கள் கேட்டால் நாங்களே பிரச்சனைகளை புதிதாக கிளப்புவதாக குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் இந்த தடைகளை எல்லாம் கடந்து 2026 ஆம் ஆண்டு பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். இந்த ஆட்சியைப் பொறுத்தவரை இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்ற நிலையில் தான் உள்ளது எனவும்  பாஜக நிர்வாகியும்  இசை அமைப்பாளருமான தீனா விமர்சித்தார்.

இதையும் படிங்க: சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பை நிறுத்தியது ஏன்? தவெக தலைவர் விஜய் கேள்வி...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share