×
 

முதல் நாளே அதகளமாகப்போகும் சட்டப்பேரவை; அவையை அதிரவைக்கப் போகும் அதிமுக!

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து இன்று சட்டப்பேரவையில் பிரச்சனையைக் கிளப்ப அதிமுக திட்டமிட்டுள்ளது.

2025ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று தொடக்கவுள்ளது. கூட்டத்தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யவுள்ளது. 

கடந்த ஆண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் உரையில் சில வார்த்தைகளை தவிர்த்துவிட்டு படித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 2023ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி, திராவிட மாடல் போன்ற வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்தார். இதனால் தமிழகம் முழுவதும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பின. கடந்த 2 ஆண்டுகளாகவே ஆளுநரின் உரை சர்ச்சையில் முடிந்த நிலையில் இந்த ஆண்டு எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பேரவையில் ஆளுநர் என்ன பேசப்போகிறார் என்பதை கேட்க ஒட்டுமொத்த அரசியல் வட்டாரமும் ஆவலுடன் காத்திருக்கிறது. 

மற்றொருபுறம் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமை பற்றி கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அதிமுக நோட்டீஸ் வழங்கியுள்ளது. அடுத்ததாக பொங்கல் பரிசுத்தொகை தொகுப்பில் 1000 ரூபாய் வழங்காதது குறித்து பேசவும் அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: சீப்பை ஒளித்துவைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா? - மு.க.ஸ்டாலினை சீண்டிய கே.பாலகிருஷ்ணன்! 

இந்த இரண்டு பிரச்சனைகள் போதாது திமுகவின் கூட்டணி கட்சியான விசிகவும் ஒரு முக்கிய விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. வேங்கைவயல் மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து விவாதிக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: உடையும் திமுக கூட்டணி... திருமாவுக்கும் கொக்கி.. குதூகலத்தில் எடப்பாடி பழனிசாமி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share