×
 

தினமும் காதல் கணவன் டார்ச்சர்... கொலையில் முடிந்த மனைவியின் தற்கொலை!!

ஈரோட்டில் காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண் எடுத்த விபரீத முடிவு கொலை வரை சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

காதலித்து திருமணம் செய்துக்கொண்டு பின்னர் கணவர் தினமும் குடித்து விட்டு வந்து சண்டைபோடுகிறார் என சொல்லி பிரியும் ஜோடிகளை பார்த்திருக்கிறோம். மேலும் சில வீடுகளில் மனைவி கணவனை கொலை செய்யும் அளவிற்கு செல்வது போன்ற சம்பவங்களும் தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் ஈரோட்டில் காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண் எடுத்த விபரீத முடிவு கொலை வரை சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

ஈரோடு மாவட்டம் பவானி தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி கிருத்திகா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் திகட்ட திகட்ட காதலித்த மதியழகன் திருமணத்திற்கு பின் காதலை மறந்து குடிக்கு அடிமையானர். காதல் கணவன் தினமும் குடித்துவிட்டு வந்த சண்டைபோடுவது கிருத்திகாவை கவலையில் ஆழ்த்தியது. இவ்வாறாக குடித்துவிட்டு சண்டையிடுவது வாடிக்கையான நிலையில் ஒரு கட்டத்தில் மதியழகன் கிருத்திகாவை கொடுமை செய்ய தொடங்கியுள்ளார். இதை தாங்கி கொள்ள முடியாத கிருத்திகா, மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். 

கிருத்திகாவின் இறப்பிற்கு பின் அதீத குடிபோதையில் மதியழகன் பணம் கேட்டு, தன்னுடைய அம்மா சுதா, தம்பி முருகானந்தத்தை அடித்தும் அரிவாளால் வெட்டியும் தொந்தரவு செய்துள்ளார். இவ்வாறு கடந்த 11 ஆம் தேதி இரவு வழக்கம் போல மதியழகன் தகராறு செய்துள்ளார். இதனால் பொறுமையிழந்த தாய் சுதா, மகன் முருகானந்தம், நண்பர் கௌரி சங்கர் மற்றும் கிருத்திகாவின் அண்ணன் யோகேஷ், உறவினர் சக்தி பாண்டி ஆகியோர் அனைவரும் ஒன்றுசேர்ந்து மதியழகனை அடித்து கொலை செய்தனர். பின்னர் அவரை ஆற்றில் வீச முடிவு செய்த அவர்கள் சடலம் மேலே மிதந்து வராமல் இருக்க மதியழகனின் வயிறு மற்றும் மார்பை பிளந்து அதில் கற்கலை வைத்து கட்டி சடலத்தை ஆற்றில் எரிந்துள்ளனர்.

இதையும் படிங்க: தனிமையில் இருக்க சென்ற கள்ளக்காதல் ஜோடி... ரிசார்ட்டில் நடந்த விபரீதம்!!

அந்த சடலம் அழுகிய நிலையில் மிதந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று ஆற்றில் மிதப்பதாக போலீஸுக்கு தலவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், சடலத்தை பரிசோதனை செய்தபோது, உடலில் கற்கள் கட்டப்பட்டிருந்ததும் வயிறு மற்றும் மார்பு பிளக்கப்பட்டு அதில் கற்கள் சொருகப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதனால், இவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், இவர் மதியழகன் என்பதும், இவரது உறவினர்கள் தான் இவரை கொலைசெய்து ஆற்றில் வீசியதும் தெரியவந்தது. இதை அடுத்து மகனை கொலை செய்த தாய் உட்பட 5 பேரையும் கைது செய்த போலீசார், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், ஆம்னி கார், ஒரு பைக்கையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இறுதியாக கைது செய்யப்பட்ட 5 பேரையும் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

இதையும் படிங்க: வகுப்பறையில் செல்போன் பயன்படுத்திய மாணவன்.. பேராசிரியர் கண்டித்ததால் விபரீதம்.. தாய் அளித்த புகாரின் பேரில் விசாரணை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share