கல்வி நிதியில் பிளாக்மெயில் செய்றாங்க ..மாநில பொறுப்பில் இருக்க அக்காவுக்கு.. அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி..!
கல்வி நிதியில் மத்திய அரசு நம்மை பிளாக்மெயில் செய்கிறது என பாஜக தமிழிசை சௌந்தரராஜனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி !
திமுக இளைஞரணிச் செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 47வது பிறந்த நாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்டத்தில் 47வது நிகழ்ச்சியாக மாவட்ட மற்றும் கிழக்கு மாநகர கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சார்பில் சமத்துவ பொங்கல் விழா திருவரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள காட்டூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில்மாவட்ட அமைப்பாளர் ராஜ்குமார், மாநகர அமைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளரும், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, மாநகரச் செயலாளர் மதிவாணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , உழவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அவர்கள் மீதான கடன்களை தள்ளுபடி செய்தது திமுக அரசு, ஆனால் உழவர்களின் கழுத்தை நெரிக்கும் விதமாக மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்து ஒன்றிய அரசு எப்படி எல்லாம் நெருக்கடியை தந்தது, அதையும் எதிர்த்து போராடியதால் தற்போது பின்வாங்கி இருக்கிறது, அதற்கான முதல் குரல் தமிழக முதலமைச்சரின் குரலாக இருந்தது. ஒன்றிய அரசாங்கத்தின் UGC NET தேர்வை ஜனவரி 15 அன்று வைக்கிறார்கள். நம்மை எப்படி எல்லாம் வஞ்சிக்க வேண்டும், நம்முடைய பண்பாடு கலாச்சாரத்தில் எப்படியெல்லாம் குறுக்கிட வேண்டும் என்பது பற்றி உட்கார்ந்து யோசிச்சு யோசிச்சு செய்வார்கள் போலிருக்கிறது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
கல்வி என்று வரும் பொழுது மாநில பட்டியலில் கொடுத்து விடுங்கள், எங்கள் பிள்ளைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், எங்கள் பிள்ளைகளுக்கு என்ன தேவை என்பதையும், நாங்கள் படிப்பு சொல்லி கொடுத்துகிறோம் என எதுக்காக சொல்கிறோம்,இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஒன்றிய அரசாங்கம் இடைநிற்றலே இல்லாத மாநிலம் தமிழ்நாடு என்ற பெயரை பெற்றுள்ளோம் என்று சொன்னால், எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும், எங்களிடம் கொடுத்து விடுங்கள் இதை என்று சொன்னால் அந்த தேசிய கட்சியின் மாநில பொறுப்பில் இருக்கக்கூடிய அக்கா தமிழிசை. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களே வரலாறை தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார்.எப்பொழுது மாநில பட்டியலுக்கு வந்தது தெரியுமா என கேட்கிறார்.கண்கரண்ட்லிஸ்ட் என்றால் அது ஒத்திசைவு. அந்த ஒத்திசைவு என்று சொன்னால் இரண்டு பேரும் சேர்ந்து கலந்து முடிவெடுக்கலாமா, எடுக்க வேண்டாமா, உங்களுக்கு அது ஒத்திசைவோடு இருக்கிறதா என்பதை கேட்கணும் என்றார் .
தொடந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் இதுவரைக்கும் யாரும் காங்கிரஸ் பேரியக்கத்தில் எந்த ஒரு நெருக்கடியையும் கொடுக்கவில்லை, உங்களுக்கு வேண்டியதை செய்து கொள்ளுங்கள் என்று சொன்னார்களே தவிர, யாரும் உள்ள குறுக்க புகுந்து இதனை ஒத்துக்கொண்டு இதில் கையெழுத்துப் போட்டால்தான் உனக்கு பணம் தருவேன் என இதுவரை யாரும் சொன்னதில்லை, முதல் முறையாக புதிதாக ஒன்றிய அரசு ஆரம்பித்து உள்ளது. மும்மொழி கொள்கையில் கையெழுத்து போட்டால் தான் காசு தருவேன் என சொல்வது, அதுவும் அந்த அமைச்சர் எப்படி சொல்கிறார் கையெழுத்து போடுங்கள் அரை மணி நேரத்தில் பணத்தை கொடுத்து விடுகிறோம், இது ஒரு பிரச்சனையே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு தமிழக அரசை பிளாக் மெயில் செய்கின்றனர் இது உங்களுக்கு தெரியாதா அக்கா என தமிழிசைக்கு பதில் அளித்தார்.
மேலும் தமிழக முதலமைச்சரோ நம்முடைய கொள்கையை விட்டு அந்த பணத்தை வாங்க வேண்டிய அவசியம் இல்லை, அது எவ்வளவு ஆனாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் தைரியமாக நீ கல்வி துறையை பார் என்று சொல்லி உள்ளார்.இன்னும் எவ்வளவு நெருக்கடி வந்தாலும் அதையெல்லாம் உதறி தள்ளிவிட்டு நமக்கான கொள்கை இருக்கின்றது.நம்முடைய பிள்ளைகளை நாம் பாதுகாப்போம் என்ற விதத்தில், எல்லா விதத்திலும் முன்னேறுகின்ற மாநிலமாக நம்முடைய மாநிலம் இருக்கிறது என்றால் தமிழக முதல்வர், துணை முதல்வரே காரணம் என்றும் அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விசாரிக்காமல் ஏன் தாவுகிறீர்கள்?...கே.பாலகிருஷ்ணன், அண்ணாமலைக்கு நேரடி கண்டனம் தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்.
இதையும் படிங்க: பள்ளியை மூடாதீங்க மா.. காலில் விழுந்து கெஞ்சிய பா.ம.க MLA..