×
 

ஒரு நடிகர் தேர்தல்ல கூட நிக்கல, ஆனால் அவர் தான் அடுத்த முதல்வராம் - விஜயை டைரக்ட் அட்டாக் செய்த திருமா!

யார் கட்சி தொடங்கினாலும் விசிகவை சேதப்படுத்த முடியாது என திருமாவளவன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

விசிக தேர்தல் வெற்றி விழா பொதுக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, நடிகர்கள் கட்சி தொடங்கும் போதெல்லாம், விசிக பலவீனப்படும் என பேசுவார்கள். விஜயகாந்த் கட்சி தொடங்கிய போதும் அப்படி சொன்னார்கள். ஆனால், அதனை கடந்து விசிக நீடித்து வருகிறது என்றார்.

யார் கட்சி தொடங்கினாலும், அவர்களுக்கு என்ன செல்வாக்கு இருந்தாலும் விசிகவை சேதப்படுத்த முடியாது. அதற்கு இந்த இயக்கத்தின் களமும், கொள்கை, கோட்பாடும் முற்றிலும் புதிது. சினிமா கவர்ச்சியின் மூலம் இந்த இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்களை திசை மாற்ற முடியாது என கூறினார்.

இதையும் படிங்க: மானிய கோரிக்கைகளுக்கான அறிவிப்புகளில் அதை சரி செய்யனும்... திருமா கூறுவது என்ன?

ஒரு நடிகரின் பின்னால் இளைஞர்கள் திரும்புவார்கள் என்றால் அந்த இளைஞர்கள் திருமாவளவனுக்குத் தேவையில்லை. அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸை புரிந்துகொண்டு திருமாவளவனோடு பயணிப்பவர்கள் தான் உண்மையான சிறுத்தைகளாக இருக்க முடியும். அவர்களை எந்தக் கொம்பனாலும் ஈர்க்க முடியாது, திசைமாற்றவே முடியாது என திருமாவளவன் தெரிவித்தார்.

25 ஆண்டு காலமாக, ஒரு பட்டாளத்தை விசிக சீரான வேகத்தில் வைத்துக்கொண்டுள்ளது என்றும் நமக்கு எந்த சரிவும் வீழ்ச்சியும் இல்லை., 25 ஆண்டுகள் கடந்து கட்சி தாக்குப் பிடிப்பதே சாதனை மற்றும் வெற்றி என கூறினார். திமுக, அதிமுகவோடு நாம் இணைந்துள்ளதால் தான் வெற்றி என சிலர் ஏளனம் பேசுகின்றனர்.,

ஆனால், ஆண்ட கட்சிகளே விசிக கூட்டணிக்கு வேண்டும் என விரும்பும் நிலைக்கு நாம் உறுதியாக இருக்கிறோம்., இன்றைக்கு விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. தற்போது ஒரு நடிகர், தேர்தலிலும் நிற்கவில்லை, போட்டியிடவில்லை, ஆனால் அடுத்த முதல்வர் அவர்தான் என பேசுகின்றனர் என விமர்சித்தார்.நாம் வாக்கு வங்கியை தனியாக நிரூபிக்காததால், பெரிய அரசியல் கட்சியினர், நம் செல்வாக்கை வைத்து 10 தொகுதிக்குள் தான் ஒதுக்குகின்றனர்.

தங்களுக்கு கொள்கைதான் பெரிது என்பதால் குறைந்த தொகுதியை ஏற்றுக் கொள்கிறோம் என்றும் தமிழக மக்கள் நலனுக்காக, வகுப்புவாத சக்திகள் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதற்காகவே தொடர்கிறோம் எனவும் தெரிவித்தார். கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என்பது நமது கனவு. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது நமது இலக்கு எனப் திருமாவளவன் கூறினார். 

இதையும் படிங்க: அதிகார வலிமைமிக்க கட்சியாக விசிகவை மக்கள் மாற்றுவார்கள்... நம்பிக்கையில் தொல். திருமாவளவன்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share