மத்திய அமைச்சர்கள் ஊதியத்துக்காக ரூ.1,024 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு
மத்திய அமைச்சர்களுக்கு, அமைச்சரவை செயலர்கள், பிரதமர் அலுவலகம், விருந்தோம்பல், விருந்தினர்கள் பொழுதுபோக்கு ஆகியவற்றுக்காக 2025-26 நிதியாண்டில் ரூ.1,024.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2024-25ம் நிதியாண்டில் இந்தத் தொகை ரூ.1021.83 கோடியாக ஒதுக்கப்பட்டிருந்தநிலையில் அதைவிட சற்று அதிகரித்துள்ளது. மத்திய பட்ஜெட்டை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்றுமுன்தினம் தாக்கல் செய்தார்.
அதில் “ வரும் 2025-26 நிதியாண்டில் அமைச்சரவை குழுக்களின் செலவுக்காக ரூ.619.04 கோடி ஒதுக்கப்பட்டது. இது நடப்பு 2024-25 நிதியாண்டில் ரூ.540.95 கோடியாக இருந்தது. இந்த நிதி ஒதுக்கீடு என்பது ஊதியம், உணவு உள்ளிட்ட இதர செலவுகள், மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் பயணச் செலவு இதில் இடங்கும்.
இது தவிர விவிஐபிக்களுக்காக சிறப்பு விமானம் இயக்குநதல், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலருக்காக ரூ.182.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2024-25 நிதியாண்டில் ரூ.270.08 கோடியாக அதிகரித்திருந்தநிலையில் குறைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பட்ஜெட் 2025: ஜன்னல், தாடி, மெழுகு வர்த்தி, ஏன்....'பேச்சலர்' வாழ்க்கைக்கும் வரி; சுவாரஸ்ய தகவல்கள்
முதன்மை அறிவியல் ஆலோசருக்காக நடப்பு நிதியாண்டில் ரூ.65.72 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் வரும் நிதியாண்டில் ரூ.70.12 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கேபினெட் செயலருக்கு ரூ.75.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது நடப்பு நிதியாண்டைவிட ரூ.2 கோடி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெண் ஏடிஜிபிக்கே பாதுகாப்பில்லை...மூடிமறைத்து மவுனமாக்க முயல்வதா...எடப்பாடி, அண்ணாமலை விமர்சனம்