டிக்டாக் தடை: 5 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா ஏன் தடை செய்தது தெரியுமா?
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகக் கூறி, சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள “டிக்டாக் செயலிக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று(19ம்தேதி) தடைவிதித்து உத்தரவிட்டது
அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யும் முன் அந்த நிறுவனத்துக்கு கூடுதல் அவகாசம் தரப்படும் என்று தெரிவித்தார். இதனால் அமெரிக்காவில் நிரந்தரமாகத் தடை விதிப்பதில் இருந்து டிக்டாக் தப்பித்தது.
சீனாவைச் சேர்ந்த டிக்டாக் செயலி ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்புக் காரணத்தைக் கூறி தடை செய்யப்படுவது இது முதல்முறை அல்ல. கடந்த 2020ம் ஆண்டு இந்தியாவில் டிக்டாக் உள்பட 59 செயலிகள் தடை செய்யப்பட்டன. இதில் பெரும்பாலானவை சீனாவைச் சேர்ந்த செயலிகளாகும். டிக்டாக் தவிர ஷேர்இட், எம்ஐ வீடியோ கால், கிளப் ஃபேக்ட்டரி, கேம் ஸ்கேனர் ஆகியவை தேசியப் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி தடை செய்யப்பட்டது.
இந்தியா –சீனா எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவியது.இதையடுத்து, சீனாவில் இருந்து வெளிவரும் ஏராளமான செயலிகள், விளையாட்டு செயலிகள், சமூகவலைத்தளங்கள் என பலவற்றை இந்திய அரசு தடை செய்தது. மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் “ இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் கேடு விளைவிக்கும் செயல்பாடுகளை சீனாவில் இருந்து வெளியாகும் செயலிகள் செய்கின்றன.
இதையும் படிங்க: ஒரே நாளில், 2,500 போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு 'பொது மன்னிப்பு' பதவி விலகும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி
நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்கும் குந்தகம்விளைவிக்கிறது. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் எங்களுக்கு வந்துள்ளன, மொபைல் செயலிகளை பலரும் தவறாகப் பயன்படுத்துகிறார்கள், செயலிகல் மூலம் இந்தியர்களின் சுயவிவரங்கள் திருடப்படுகின்றன, அதன் மூலம் ஆன்லைன் மோசடிகளும் நடக்கின்றன. இந்த செயலிகளைக் கட்டுப்படுத்தும் சர்வர்கள் அனைத்தும் இந்திய எல்லைக்கு இருப்பதால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக இருக்கிறது. ஆதலால், டிக்டாக் உள்ளிட் சீனாவில் தயாரிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “கனடாவை அமெரிக்காவுடன் இணைச்சிருங்க”: ஜஸ்டின் பதவி விலகியவுடன் சேட்டையைத் தொடங்கிய டிரம்ப்..