×
 

86,000 பேருக்கு வீட்டு மனை பட்டா..! முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

ஏழை எளிய மக்களின் நீண்ட கால பிரச்சனையாக இருந்து வரும் வீட்டுமனை பட்டாக்கள் வழங்குவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஏழை எளியவர்களுக்கான இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்குவதில் அதிக முனைப்பு காட்டி வருகின்றனர்.  அதிமுக எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் தொடங்கி இன்று திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் வரை தொடர்ந்து இந்த திட்டங்கள் அதிகப்படுத்தபட்டு வருகிறது.

அந்த வகையில் பல ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடிய முக்கியமான அறிவிப்பு ஒன்றினை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார் இதனால் பயன்படக்கூடிய சுமார் 86,000 குடும்பங்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளன.

இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் அமைந்துள்ள கூட்டாரங்கில் அமைச்சர்களுடன் அதிகாரிகளுடன் பேசி முடிவு எடுத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கங்களிலும் அதிகாரப்பூர்வ அரசு அறிக்கையிலும் இந்த செய்தியை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பேரறிஞர் அண்ணா நினைவுநாள் - மலரஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வாக, சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் “பெல்ட் ஏரியாக்களில்” ஆட்சேபனையற்ற  புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர் மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க இன்றைய #CabinetMeeting-இல் ஒப்புதல் வழங்கியுள்ளோம்.

6 மாதங்களில் இதனைச் செய்துமுடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம்! உங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப் பட்டுள்ளன, என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இபிஎஸ் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை.. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share