×
 

பாலியல் வன்கொடுமை... பதவியேற்கப்போகும் முன் நீதிமன்றம் வைத்த செக்..! கதறும் ட்ரம்ப்..!

ஒரு நட்பு சந்திப்பின் போது டிரம்ப் திடீரென ஒரு கடையின் ஆடை அறைக்குள் நுழைந்தபோது தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 2023 ஆம் ஆண்டு விசாரணையில் கரோல் சாட்சியமளித்தார்.

துஷ்பிரயோக வழக்கில் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான ஐந்து மில்லியன் டாலர் தீர்ப்பை அமெரிக்க நீதிமன்றம் உறுதி செய்தது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாலியல் வன்கொடுமை வழக்கில் நிவாரணம் வழங்க தடைகோரும் மேல்முறையீட்டை அமெரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நீதிமன்றம் ட்ரம்பின் மேல்முறையீட்டை நிராகரித்தது. பாலியல் வன்கொடுமை குறித்த அவதூறுக்காக எழுத்தாளர் ஈ. ஜீன் கரோலுக்கு $5 மில்லியன் வழங்க உத்தரவிட்ட தீர்ப்பை உறுதி செய்தது. இந்த வழக்கு 1996 ஆம் ஆண்டு மன்ஹாட்டனில் உள்ள பல்பொருள் அங்காடியில் நடந்த பாலியல் சம்பவம் தொடர்பாக ஒன்பது நாள் சிவில் விசாரணைக்குப் பிறகு டிரம்ப் குற்றவாளி என்று கடந்த ஆண்டு நடுவர் மன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால் தற்போது அவரது அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டிரம்ப் கொடுத்த‘ட்ரம் கார்டு’... சீனாவை 5 பக்கமும் அதிர வைக்கக் காத்திருக்கும் இந்தியா..!

டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்க தயாராகி வரும் வேளையில் அவருக்கு எதிராக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜீன் கரோலின் அவதூறு, பாலியல் சுரண்டலுக்காக மன்ஹாட்டன் நடுவர் மன்றத்தால் ட்ரம்ப் மீது விதிக்கப்பட்ட 5 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீட்டை அமெரிக்க சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

1996 ஆம் ஆண்டு ஒரு நட்பு சந்திப்பின் போது டிரம்ப் திடீரென ஒரு கடையின் ஆடை அறைக்குள் நுழைந்தபோது தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 2023 ஆம் ஆண்டு விசாரணையில் கரோல் சாட்சியமளித்தார்.

டொனால்ட் டிரம்ப் இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று பலமுறை மறுத்துள்ளார். கரோல் எல்லே பத்திரிகையின் கட்டுரையாளராக இருந்துள்ளார். பாலியல் துன்புறுத்தலுக்கு 2 மில்லியன் டாலர்களும், அவதூறு செய்ததற்காக 3 மில்லியன் டாலர்களும் டிரம்ப் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ட்ரம்பின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங், ‘‘பாலியல் வன்கொடுமை, அவதூறு வழக்கில் $5 மில்லியன் நஷ்டஈடுக்கு  மேல்முறையீடு செய்யப்போகிறோம். அமெரிக்க மக்கள் அதிக அளவில் அதிபர் டிரம்பை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர். நமது நீதி அமைப்பை அரசியல் ஆயுதமாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அனைத்து சூனிய வேட்டைகளையும் உடனடியாக நிராகரிக்க வேண்டும்’’ என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: டிரம்ப் கொடுத்த‘ட்ரம் கார்டு’... சீனாவை 5 பக்கமும் அதிர வைக்கக் காத்திருக்கும் இந்தியா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share