“என்ன பார்த்தா உனக்கு எப்படிடா தெரியுது”... சீமானை ஒருமையில் விளாசிய விஜயலட்சுமி...!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை விஜயலட்சுமி சற்று நேரத்திற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் இன்று காலை சீமான் வீட்டிற்கு வருகை தந்து நோட்டீஸ் ஓட்டினர். இந்நிலையில் சீமானின் உதவியாளர் அந்த நோட்டீஸை கிழித்தார். உடனே போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் காவலர் முன்பு துப்பாக்கியைக் காட்டியதாக சீமானின் காவலாளியும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் முன்னாள் ராணுவ வீரர் என்றும், அதனால் அவரிடம் துப்பாக்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே ஒசூரில் செய்தியாளரிடம் பேசிய சீமான், விஜயலட்சுமியையும் தன்னையும் நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும், திமுக ஆட்சி நேரத்தில் தான் இந்தம்மா வரும், ஜெயலலிதா, எடப்பாடியார் அதிமுக 10 ஆண்டு ஆட்சியில் ஏன் வரவில்லை. தேர்தல் வந்தால் வருவார், என்னை சமாளிக்க முடியாததால் இந்தம்மாவை (விஜயலட்சுமி) கூட்டி வந்து நிறுத்துகிறார்கள் என்றெல்லாம் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை விஜயலட்சுமி சற்று நேரத்திற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “2023ல் என்கிட்ட ஒரு பேச்சுவார்த்தைக்கு வந்தீங்க இல்லையா. அப்போ நான் மாசம், மாசம் 50 ஆயிரம் கொடுக்கிறேன், என்னை பத்தி எங்கேயும் பேசாத அப்படின்னு சொல்லிட்டு மாசம் மாசம் 50 ஆயிரம் எல்லாம் போட்டீங்க. என்கிட்ட வீடியோஸ் எல்லாம் வாங்குனீங்க. அப்புறம் மதுரை செல்வம் உங்க வீட்டுக்காரர் கிட்ட பேசுறதுக்கு யார்கிட்ட கேட்கணும் அப்படின்னு வாக்குமூலம் எல்லாம் கொடுத்தான். அப்புறம் உங்க பொன்னான வாயில இருந்து தான பொண்டாட்டி பொண்டாட்டி பொண்டாட்டி பொண்டாட்டி அப்படின்னு நீங்க வீடியோ எல்லாம் பண்ணனீங்க. அந்த வீடியோ எல்லாத்தையும் காவல்துறைக்கிட்ட கொடுத்தோம்.
இதையும் படிங்க: “இப்ப வா பார்க்கலாம்”... சீமான் வீட்டின் முன்பு போலீஸ் செய்த தரமான சம்பவம்... ஷாக்கான நாதக தம்பிகள்...!
காவல்துறை எடுத்துட்டு போய் அதை அப்படியே நீதிமன்றத்தில் கொடுத்தது. அதையெல்லாம் பார்த்துதான் அவங்க விஜயலட்சுமி உங்களோட முதல் மனைவியா அப்படின்னு கேட்டிருக்காங்க. திமுக ஒன்னும் உங்கள வந்து போன வருஷம் விஜயலட்சுமிக்கு 50,000 கொடுத்து இந்த மாதிரி கேவலப்பட்டு வேலை எல்லாம் பண்ணு அப்படின்னு சொல்லல. ஏன் அவங்கள சும்மா வம்புக்கு இழுக்குறீங்க. அப்பறம் இன்னொரு விஷயம் சொன்னீங்களாம் “அந்த பொம்பளையை கொஞ்சம் நேர்ல வர சொல்லுங்க நான் உட்கார்ந்து பேசுறேன்” அப்படின்னு நான் காத்துட்டு இருக்கேன் சீமான் உங்களை நேர்ல பார்த்து என்னைய பார்த்தா உனக்கு எப்படிடா தெரியுது அப்படின்னு கேட்கனுன்னு தான் இருக்கேன்.
கொஞ்சம் காவல்துறை கிட்ட சொல்லுங்க, உடனே அதுக்கு அரேஞ்ச் பண்ணிடுவாங்க. ஏமாத்தாதீங்க சீமான், என்னோட பாவத்தை கட்டிக்காதீங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட சமாதான பேச்சுவார்த்தைக்கு நீங்க ஆட்களை அனுப்பிச்சிட்டு, இன்னைக்கு அப்படியே பிரஸ் கிட்ட வந்து அந்த பொம்பளை அவ இப்படி அப்படின்னு இன்னைக்கு கூட துரோகம் பண்றீங்களா?.
நான் சொல்லிட்டே இருக்குறேன். என்னோட பாவம் உங்களை சும்மாவே விடாது இன்னும் எப்படி எல்லாம் போட்டு படுத்தி எடுக்க போகுது அப்படின்னு நீங்க பாருங்க. மீடியா தயவு செஞ்சு இந்த வீடியோ கொஞ்சம் டெலிகாஸ்ட் பண்ணுங்க சீமான் பார்க்கணும் என பேசியுள்ளார்.
இதையும் படிங்க: சீமானை ஜெயிலுக்கு அனுப்பாம விடமாட்டாங்க போலயே... போலீசாருடன் நாதக தொண்டர்கள் கடும் வாக்குவாதம்...!