×
 

அதிபர் பதவியேற்ற சில மணிநேரங்களில் திடீர் முடிவு... ட்ரம்ப் அரசில் இருந்து ராஜினாமா செய்த விவேக் ராமசாமி..!

கடந்த இரண்டு மாதங்களாக அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு நாங்கள் அவருக்கு மிகுந்த நன்றி கூறுகிறோம். அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி, எலோன் மஸ்க்குடன் இணைந்து தலைவராக பொறுப்பேற்ற அமெரிக்க அரசின் நிதிநிர்வாகத்தை மேம்படுத்தும் DOGE அமைப்பில் இனி தொடர மாட்டார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. 

குடியரசுக் கட்சி அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த 39 வயதான ராமசாமி, ஓஹியோவின் ஆளுநர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

"DOGE உருவாக்கத்தை ஆதரிப்பதற்கு உதவுவது எனக்குக் கிடைத்த மரியாதை. எலோன், அவரது குழுவினர் அரசாங்கத்தை ஒழுங்குபடுத்துவதில் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன். ஓஹியோவில் எனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து மிக விரைவில் நான்  சொல்கிறேன். மிக முக்கியமாக, ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்க உதவ நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம்" என்று விவேக் ராமசாமி தனது எக்ஸ் தளபதிவில் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: எலான் மஸ்க் அழைக்கிறார்! பள்ளியும், படிப்பும் முக்கியமல்லையாம்! இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு...

டிரம்ப், துணைத் தலைவர் ஜே.டி.வான்ஸின் நெருங்கிய நம்பிக்கைக்குரிய விவேக் ராமசாமி, கடந்த ஆண்டு நவம்பரில் டிரம்ப்பால், மஸ்க்குடன் DOGE அமைப்பின் இணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கிடையில், அரசாங்க செயல்திறன் ஆலோசனைக் குழு தனது அறிக்கையில், DOGE அமைப்பை உருவாக்க உதவியதில் விவேக் ராமசாமியின் "முக்கியமான பங்கிற்காக" பாராட்டியுள்ளது. 

"விவேக் ராமசாமி விரைவில் ஓஹியோவின் ஆளுநர் பதவிக்கு போட்டியிட  திட்டமிட்டுள்ளார்.  இன்று நாங்கள் அறிவித்த கட்டமைப்பின் அடிப்படையில் அவர் DOGE அமைப்பை விட்டு வெளியேறி உள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு நாங்கள் அவருக்கு மிகுந்த நன்றி கூறுகிறோம். அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்" என்று அரசாங்க செயல்திறன் ஆலோசனைக் குழுவின் செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி தெரிவித்துள்ளார். 

சின்சினாட்டியில், வசித்த இந்திய இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் விவேக் ராமசாமியின் பெற்றோர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலும், யேல் சட்டப் பள்ளியிலும் படித்தார். ஹெட்ஜ் நிதிகள், மருந்து ஆராய்ச்சி துறையில் மிகவும் பிரபலமானவர் விவேக் ராமசாமி.

ஓஹியோ கவர்னர் பதவிக்கு போட்டியிடுவதற்கான தனது முடிவை அறிவிக்க ராமசாமி திட்டமிட்டுள்ளார். விவேக்கின் அடிப்படைத் திட்டம் அப்படியே உள்ளது. விரைவில் கவர்னர் பதவிக்கு போட்டியிடுவதால் DOGE அமைப்பில் இருந்து வெளியேறி உள்ளதாக விவேக் ராமசாயின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி விவேக் ராமசாமி தங்களிடம் கூறியதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அவர் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டால், மைக் டிவைனை மாற்றுவார்.ஓஹியோ தேர்தல் நவம்பர் 2026 -ல் நடைபெற உள்ளது.

உலகின் பணக்கார மில்லினியல்களில் ஒருவரான ராமசாமி, அரசியலில் கவனம் செலுத்துவதற்கு முன்பு பயோடெக் தொழில்நுட்பத்துறையில் சாதனை படைத்தவர்.

இதையும் படிங்க: ஆங்… தொப்பி… தொப்பி… பதவியேற்பு விழாவில் ட்ரம்பின் முத்த ஏக்கம்… வெட்கப்பட்டுப்போன மனைவி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share