×
 

பி.கே-விடம் ரூ.100 கோடியும் சீமான் கட்சியையும் தருகிறேன்..! விஜய்க்கு எஸ்.வி.சேகர் சவால்..!

விஜய் விழாவில் 'கெட் அவுட்' என்கிற பதாகையில் கையெழுத்து போட மாட்டேன் என்று பிரசாந்த கிஷோர் சொன்னது தவறான விஷயம் கிடையாது.

'பிரசாந்த் கிஷோரிடம் 100 கோடி ரூபாய் கொடுத்தால் சீமான் கட்சியை ஜெயிக்க வைத்து விடுவாரா..? என தவெகவை கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகரும் இயக்குநருமான எஸ்.வி.சேகர்.

''பிரசாந்த் கிஷோர் ஒரு இந்திக்காரன்.  யாரும் பிரஷாந்த் கிஷோரால் ஜெயிக்கவில்லை. அரசியல் கட்சிகள் வெற்றிபெற்ற பிறகு நான் சொன்னேன். அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்று பிரசாந்த் கிஷோர் மார்தட்டிக் கொள்வார்.  நான் ஒரு கட்சியை கொடுக்கிறேன். சரி, சீமான் கட்சியையும் கொடுத்து 100 கோடியும் ரூபாயும் தருகிறேன்.சீமான் கட்சியை ஜெயிக்க வைத்து விடுவாரா?

 விஜய் விழாவில் 'கெட் அவுட்' என்கிற பதாகையில் கையெழுத்து போட மாட்டேன் என்று பிரசாந்த கிஷோர் சொன்னது சொன்னது தவறான விஷயம் கிடையாது. உதாரணத்துக்கு நான் டெல்லி செல்கிறேன். அங்கே ஒரு மீட்டிங் நடக்கிறது. 'தமிழ் மொழி ஒழிக' என்று போர்டு போட்டிருந்தால் அதில் நான் கையெழுத்து போடுவேனா? போடா என்று விரட்டமாட்டேனா? அதைத்தான் இங்கு செய்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.

இதையும் படிங்க: இனி அண்ணாமலையை இப்படி கூப்பிடுங்க... திமுக மேடையில் பங்கமாய் கலாய்த்த எஸ்.வி.சேகர்...!

 

அவரை கையெழுத்து போட அழைத்த முட்டாள்களைத்தான் குறை சொல்ல வேண்டும். விஜய் அவரை கையெழுத்துப்போட கூப்பிடவில்லை. அவருக்கு பின்னால் இருந்த அடிப்பொடிகள்தான் பிரசாந்த் கிஷோரை அழைத்தனர். திமுக ஒரு அரசியல் கட்சி. ஆனால், அந்த கட்சியின் பலம் என்னவென்று தெரியுமா? திமுக ஆளும் கட்சி என்பதற்காக சொல்லவில்லை. திமுக கட்சியினுடைய அடிப்படை பலம் தொண்டர்கள். அதனுடைய கட்டமைப்பும்தான்.

விஜயை நான் ஆரம்பத்தில் ஆதரித்ததற்கு காரணம் விஜயினுடைய ரசிகர் மன்றத்தில் ஒரு கட்டமைப்பு இருந்தது. அந்த கட்டமைப்பை அப்படியே கொண்டு போய் அரசியலில் சொருக முடியாது. நான் இங்கே தரையில் அஸ்திவாரம் போட்டேன். அதை அப்படியே கொண்டு போய் கடலில் வைத்தால் சரியா இருக்குமா? இங்கே போடுகிற அஸ்திவாரம் வேறு... அங்கே போடுகிற அஸ்திவாரம் வேறு என்பதை விஜய் தெரிந்து கொள்ள வேண்டும்.

விஜய் முதலில் கேரவனை விட்டு வெளியே வர வேண்டும். சும்மா 'ப்ரோ... வாட் ப்ரோ... ஒய் ப்ரோ' என்று காமெடியாகப் பேசி எல்லாம் இங்கு அரசியல் செய்ய முடியாது. தமிழ்நாட்டு நிலவரம் பற்றி பேச வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தேர்தலுக்குப்பிறகு நிதிஷ்குமார் பாஜகவுக்கு மாபெரும் துரோகம் செய்வார்... பி.கே போட்ட அணுகுண்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share