பெண்களுக்கு 1000 ரூபாய் வேண்டாம்; பாதுகாப்பு தான் வேண்டும்... சௌமியா அன்புமணி ஆவேசம்
10 வயது 13 வயது, 6 வயது, 45 வயது பெண்ணுக்கு கூட பாதுகாப்பு இல்லை. இதை கேள்வி கேட்டால் எங்களை கைது செய்வதா? என சௌமியா அன்புமணி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு பாமக மகளிர் சங்கம் சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது இந்த போராட்டத்திற்கு முறைப்படி காவல்துறையில் அனுமதிக்கட்டும் கடைசி நேரத்தில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர் இந்த நிலையில் போராட்டம் நடத்த வந்த பாமகவினரை போலீசார் கைது செய்தனர் போராட்டத்திற்கு தலைமை தாங்க வந்த பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணியை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர் அப்பொழுது ஆவேசமாக காணப்பட்ட சௌமியா அன்புமணி கோபமாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார் என்ன நாடு இது முறைப்படி போராட்டம் நடத்த அனுமதி கேட்டு முறையாக போராட்டம் நடத்த வருகிறோம் ஆனால் திடீரென அனுமதி மறுத்து கைது செய்ய துடிக்கிறார்கள் என்ன நடக்கிறது இங்கே பெண்களுக்கு எங்கேயும் பாதுகாப்பே இல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பில்லை காஞ்சிபுரத்தில் பாதுகாப்பில்லை தஞ்சாவூரில் பாதுகாப்பில்லை கள்ளக்குறிச்சியில் நேற்று ஒரு சம்பவம் இன்னும் எத்தனை பெண்கள் தான் பாதிக்கப்பட போகிறார்கள்.
எத்தனை கல்லூரி மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள், எங்கள் வீட்டு பெண்களுக்கு 1000 ரூபாய் எதற்கு பாதுகாப்புத்தான் வேண்டும்" என சௌமியா அன்புமணி ஆவேசமாக பேசினார். பின்னர் அவரை கைது செய்த போலீஸார் வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: இந்த பக்கம் இவங்க, அந்த பக்கம் அவங்க... நடைபேரணி போராட்டத்தை கையில் எடுக்கும் காங்கிரஸ், பாஜக...
இதையும் படிங்க: அதே காட்சி அதே நிகழ்வு...அன்று சீமான் இன்று சௌமியா அன்பு மணி... தொடரும் கைது